Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியா பஸார் வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் பாரிய தீபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை)காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், உடனடியாக வவுனியா நகரசபைத் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து கட்டிடத்தின் இரண்டாம் மாடியிலுள்ள கணனியிலிருந்து பரவியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்துச் சம்பவத்தினையடுத்து இலங்கை மின்சார சபையினர் அப்பகுதிக்கான மின் இணைப்பினை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்