உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காரைநகர் களபூமி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். காரைநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞனே விபத்தில் உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். குறித்த இளைஞன் இன்று காலை கோயிலுக்கு சென்ற வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியருகே இருந்த பனை மரத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் அந்த இடத்திலேயெ பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்