உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருகிறது. மியான்மரில் ஜனநாயக ஆட்சிக்காக போராடிய சூ கி ஆட்சிக்குவந்த பின்னரும் அவர்கள் மீதான தாக்குதலில் மாற்றம் ஏற்படவில்லை, மோசம்தான் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் இனப்படுகொலைக்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்போது போராளிகளுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்பு படை தாக்குதலை தொடங்கி உள்ளது, இதனால் கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை காடாக காட்சியளிக்கிறது. வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவங்கள் நிகழும் இடத்திற்கு மீடியாக்கள் பிரவேசிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. சேட்டிலைட் புகைப்படங்கள் மக்கள் அங்கு என்ன நிலையில் உள்ளனர் என காட்டுகிறது. இப்போது இதுவரையிலும் 90,000 ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக மியான்மர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இருதரப்பு இடையே நடைபெறும் மோதலில் இஸ்லாமியர்கள் வாழ்ந்த கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது, அங்கிருந்து இஸ்லாமியர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள வங்காளதேச எல்லையை நோக்கி வந்து உள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட சேட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகிறது.

எல்லையில் மலைப்பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்து வருகிறார்கள் என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடங்களில் மியான்மர் ராணுவம் இரண்டாவது முறையாக இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது. உயிர்தப்பிக்க விரும்பி கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள் அங்குள்ள காடுகளில் குழந்தைகளுடன் உள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்