உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


83 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் கிடைக்கப் பெற்ற விருதுகள் பின்வருமாறு

சிறந்த ஆவணப் படத்திற்கான விருது: இன்ஸைட் ஜாப் – சார்லஸ் பெர்குசன், ஆட்ரே மார்ஸ் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த குறும்படத்திற்கான விருது: காட் ஆப் லவ் திரைப்படம் – படத்தின் இயக்குனர் லியூம் மெதானி ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது: வால்ட் டிஸ்னியின் டே அன்ட் நைட்.

நாவலை தழுவிய கதைக்கான ஆஸ்கர் விருது: தி சோஷியல் நெட்வொர்க் படத்துக்கு வழக்கப்பட்டது.

சிறந்த திரைக்கதைக்கான விருது: தி கிங்ஸ் ஸ்பீச் படத்துக்காக டேவிட் ஷீட்லர் பெற்றார்.

சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான விருது: டென்மார்க்கின் இன் எ பெட்டர் வோர்ல்ட் தேர்வு செய்யப்பட்டது.

துணை நடிகருக்கான விருது: தி பைட்டர் படத்தில் நடித்த கிறிஸ்டியன் பாலேவுக்கு வழங்கப்பட்டது.

ஒலித் தொகுப்புக்கான விருது: இன்செப்ஷன் படத்துக்காக ரிச்சர்டு கிங்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கானர் விருது: ரிக் பேக்கர் பெற்றார்.

சிறந்த உடை வடிவமைப்புக்கான விருது: கேலன் ஆட்வுட் பெற்றுக்கொண்டார்.

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது: தி கிங்ஸ் ஸ்பீச் படத்தின் இயக்குநர் டாக்ஹுப்பருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது: பிளாக் ஸ்வான் படத்தின் நாயகி நடாலிபோர்ட்மானுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது: காலின் ஃபிர்த் பெற்றார். தி கிங்ஸ் ஸ்பீச் படத்தில் நடித்ததற்காக காலின் ஃபிர்த்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது

One Response to “ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.”

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    வெள்ளையர்களின் பெயர்களை தமிழ் எழுத்துருவங்களில் வாசிக்கும்பொழுது மாறுபட்ட பெயர்களாக அமைகின்றன.
    சிறந்த இசையமைப்பு (BGM: Background music) இடம்பெற்ற திரைப்படம் உங்களின் வரிசையில் இல்லை. AR Rahman இசையமைத்த ‘127 Hours’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டதாக அறிந்தேன் அதன் நிலைமை?
    _
    இந்த கட்டுரையை பிரசுரித்து இருநாட்கள் ஆகியும் 3 வாசகர்கள் தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள், அதில் 2 தரம் நான். இதிலிருந்து விளங்குவது எங்கட ஊரவர்களிற்கு இப்படியான செய்திகளில் நாட்டம் இல்லையென.

Leave a Reply for நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்