உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்சுதந்திரபுரம் பகுதியில் 20.4Kg கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சுதந்திரபுரம் பகுதியில் நேற்றுக் காலை வாகனத்தில் 20.4Kg கஞ்சா பொதிசெய்யப்பட்டு மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது கஞ்சாவுடன் கிளிநொச்சியினை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் சுதந்திரபுரம் பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.குறித்த கஞ்சாபொதிகள் அனுராதபுரம் நோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய நபரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்து புதுக்குடியிருப்பு பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
குறித்த நபரை நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்