உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இந்த மாதத் துவக்கத்தில் யு.எஸ் அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவர் செர்ஜியோ எல்டோ மோராவை மெக்சிகோ கடற்படை கைது செய்தது.

மெக்சிகோ நகருக்கும் மற்றும் மாண்ட்டெரிக்கும் இடையே யு.எஸ் சுங்க அதிகாரி ஜெய்மே ஜபாதா பயணித்த போது போதை மருந்து கடத்தல் கும்பல் அவரை சுட்டுக் கொன்றது. இந்தக் கும்பலில் சந்தேகிக்கப்பட்ட நிலையில் போதை மருந்துக் கும்பல் தலைவர் செர்ஜியோ கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோ துருப்பினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜீலியன் சபாதா கூறுகையில்,”யு.எஸ் சுங்க அதிகாரியின் காரை தங்களது எதிரிக் கும்பலின் கார் என நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்”.

போதை மருந்து கும்பல் தாக்குதலில் இன்னொரு யு.எஸ் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரி விக்டர் அவிலாவும் காயம் அடைந்தார். சான் லூயிஸ் பொடோசி நகருக்கு வெளியே நடந்த இந்த தாக்குதலில் அவர் காயம் அடைந்தார்.

துருப்பினரிடம் பிடிபட்ட மோராசான் லூயிஸ், பொடாசி நகரில் ஜெடாஸ் போதை மருந்துக் கும்பலை நடத்தி வருபவர் என சந்தேகிக்கப்படுகிறது. போதை மருந்துக் கும்பலால் கொல்லப்பட்ட ஜபாதா 32 வயது இளைஞர். டெக்சான் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மெக்சிக்கோவில் உள்ள யு.எஸ் தூதரகத்தில் குடியேற்றம் மற்றும் சுங்கம் பிரிவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.

மெக்சிகோ ஜனாதிபதி பெலிப்பி கால்டரான் இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்திக்கிறார். அப்போது போதை மருந்து வன்முறை குறித்து விவாதிக்கிறார். கடந்த 2006 ம் ஆண்டு முதல் போதை மருந்து தொடர்பான வன்முறைகளில் 34 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்