உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பணிப்புலம் என்னும் ஊரில் பல நூற்றாண்டுகள் பழைவாய்ந்த “பணிப்புலம் முத்துமாரி அம்மன்” ஆலயம் அமைந்திருக்கிறது.ஆரம்ப காலங்களில் இந்த ஆலயத்தில் பொங்கல் வழிபாடு ஆடு,கோழி பலியிடப்பட்டு நடாத்தப்பட்டு வந்தது. பின்னர் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உயிர்ப்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டு ஊர் மக்களால் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பத்து நாட்கள் அலங்காரத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது. 1950ம் ஆண்டு காலப்பகுதியில் அலங்காரத் திருவிழா,பிரம்மோற்ஷவத் திருவிழாவாக மாற்றம் பெற்று,கொடியேற்றி பத்தாம்நாள் தேர்த் திருவிழா வரையும்,மேலும் நவராத்திரி,மார்கழி திருவெம்பாவை, என அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக ஊர் மக்களால் நடாத்தப்பட்டு வந்தது.ஆலயத்தின் நிரவாகப் பணிகளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட “ஆலய பரிபாலன சபையினர் கவனித்து வந்தனர்.

 

ஆலயமானது 1976ம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்தது. இதேஆண்டு நவராத்திரியின் இறுதி நாள் விழா நிறைவுபெறும் வேளையில் ஆலயத்தின் மடப்பள்ளி வேலைகளை கவனித்து வந்த இரு குடும்ப உறுப்பினர்களால் ஆலயம் தங்களுடையதென்று உரிமை கோரப்பட்டு ஆலயம் பூட்டப்பட்டு ஆலயத் திறப்பும் அவர்களால் எடுக்கப்பட்டது. இச்செயலால் விசனமடைந்த மக்கள் ஆலய பரிபாலன சபையினருடன் இணைந்து நீதி மன்றத்தில் வழக்குபோட்டனர். வழக்கும் பல வருடங்களாக நடந்து வந்த வேளை,ஆலயமும் பூட்டிய நிலையிலேயே இருந்து வந்தது. அவ்வேளையில் நாட்டில் யுத்தம் ஆரம்பித்ததால் ஊர் மக்கள் பலரும் புலம்பெயரந்து சென்றனர். ஆலய பரிபாலன சபையும் செயலற்றது.காலப்போக்கில் நீதிமன்ற செயற்பாடுகளும் செயலிழந்தன. 
விடுதலைப்புலிகளின் நிர்வாக காலப்பகுதியில் 1993ம் ஆண்டு ஆலய மடப்பள்ளி உதவியாளர்களாகச் செயற்பட்டவர்கள் விடுதலைபுலிகளை தொடர்புகொண்டு ஆலயம் தங்களது பரம்பரை சொத்து என்று கூறி அவர்களின் அநுமதியை பெற்று ஆலயத்தை திறந்து திருப்பணி வேலைகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் செய்து இன்று வரை ஆலயத்தை நடாத்தி வருகின்றனர்.ஆனால் கடந்த யுத்தகாலப் பகுதியில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத ஊரில் கடந்த 5ஆண்டுகளாக ஊர் மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் ஊர்மக்களுக்கும் இடையில் தொடர் மரண அவலம் நடைபெற்று வருகிறது. அதாவது,குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒருவர் இறந்தால் அவரைத் தொடர்ந்து 11-16 நாட்களுக்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறப்பதுவும்,தற்கொலை செய்து கொள்வதும் என ஒரு வருடத்தில் 20-24பேர் வரை இறக்கின்றார்கள். இந்த ஆண்டு கடந்த ஏழரை மாதங்களில் 18பேர் இறந்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த வருடம் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்துக்காக அம்பாள் சம்பில்துறை கடலுக்கு சென்று(05.08.2016) தீர்த்தோற்ஷவம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை தீர்த்தமாடிக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலிலேயே முழங்காலளவு ஆழத்தில் மயங்கி விழுந்து அவ்விடத்திலேயே இறந்தார். அவரைத் தொடர்ந்து 11நாட்களுக்கொரு தடவை ஊரிலும்,புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற மக்களில் 7பேர் வரை இறந்தனர்.அவர்களுடன் கடந்த வருடம் இறந்தோர் எண்ணிக்கை 23பேராகும்.இவர்களுள் கனடாவில் வாழ்ந்த ஒரு 4வயது பாலகன் காய்ச்சல் காரணமாக வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்டு வைத்தியர் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது மரணமடைந்தது பலரையும் வியக்க வைத்தது மட்டுமன்றி அந்தப் பாலகனின் பெற்றோர் மகனை இழந்த சோகத்திலிருந்து இன்றளவும் மீளவில்லை.மேலும்,இந்தாண்டு கடந்த வைகாசி மாதம் இந்த ஊரிலுள்ள காலையடி ஞானவேலாயுத சுவாமி ஆலயத்தில் கொடியேற்றத் திருவிழாவன்று ஏற்றிய கொடி திடீரென கீழே வீழ்ந்தது.அம்பாள் ஆலய திருவிழா 12.07.2017 ஆரம்பமானது.ஆனால் 10.07.2017 அன்று ஊரில் ஒரு முதியவர் இறந்தார்.17.07.2017 அன்று ஆடிப்பிறப்பன்று அம்பாள் வெளி வீதியுலா வந்து ஆலய வாசலில் சிம்ம வாகனத்திலிருந்து இறக்கப்படும்போது தூக்கிய பக்தர்களின் இயலாமையால் உற்சவமூர்த்தி கைதவறி கீழே வீழ்ந்து ஒரு பக்தர் காயமுற்றார். 
மேலும்,26.07.2017 அன்றய தேர்த் திருவிழாவன்று பக்தர் ஒருவர் வீட்டிலிருந்து ஆலயத்துக்கு புறப்பட்ட வேளையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டு வாசலிலேயே இறந்தார்.இந்த பக்தர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் வாழ்பவர்.ஆலயத் தேர்த் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தவராவார்.இவரது இறப்பு ஊர்மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் வேளையில் மீண்டும் 15.08.2017அன்று மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். மீண்டும் இம்மாதம் 06ம்,08ம்,09ம் திகதிகளில் மூன்று முதியவர்கள் திடீர் மரணமடைந்துள்ளனர். ஊர் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
ஆனால் ஆலய தர்மகர்த்தாக்கள் இந்த நிலைமைகள் பற்றி எவ்விதமான கவனமும் செலுத்தாது,மக்களின் கருத்துக்களையும் செவிமடுக்காது உதாசீனப்படுத்துகிறார்கள். ஆலயத்தில் திருப்பணி,கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் ஆலயமும் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது.இதனால் ஊர் மக்கள் அச்சமும்,ஆலய தர்மகர்த்தாக்கள் மீது விசனமும் அடைந்துள்ளனர்.
சி.சிவானந்தம்.
 

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்