தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் என்ற வகையில் நாம் பூரண ஆத­ர­ வு­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்­கி­யுள்ளோம். தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கா­கவே முழு மூச்­சுடன் செயற்­ப­டு­கின்றோம். உற்­சா­கத்­துடன் செய­லாற்றி வரு­கின்றோம். எனினும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணையாளரின் அவ­ச­ரத்­திற்கு எம்மால் எத­னையும் செய்ய முடி­யாது. எமக்கு கால அவ­காசம் வேண்டும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை நாம் புறந்­தள்ள மாட்டோம். அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் முழு­மை­யான தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்த் அல் ஹூசைன் நேற்று முன் தினம் இலங்கை அர­சாங்­கத்தின் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்தார். இது தொடர்பில் வின­விய போதே அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

யுத்தம் கார­ண­மாக வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அளவில் பாதிக்­கப்­பட்­டனர். இவர்­க­ளுக்­கான உத­வி­களை அர­சாங்கம் தொடர்ந்து செய்து கொண்­டுதான் வரு­கி­றது. நாங்கள் எதிலும் குறை வைக்­க­வில்லை. ஆனால் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் குற்­றச்­சாட்­டு­களை நியா­ய­மற்­ற­வை­யாகும்.

யுத்­த­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வடக்கு கிழக்கு மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் வகையில் அப்­ப­கு­தி­க­ளுக்கு அதி­க­ள­வி­லான உத­வி­களை செய்­துள்ளோம். பல்­வேறு வித­மான அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம். மேலும் பல ஏக்கர் காணி­களை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் இருந்து விடு­வித்­துள்ளோம்.

எனவே தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கா­கவே முழு மூச்­சுடன் செயற்­ப­டு­கின்றோம். உற்­சா­கத்­துடன் செய­லாற்றி வரு­கின்றோம். எனினும் முழு­மை­யாக அனைத்து பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு எமக்கு கால அவ­காசம் வேண்டும். வடக்கு பிரச்­சினை சாதா­ர­ண­மான விட­ய­மல்ல. அதில் பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. இவற்றை பொறு­மைா­கதான் தீர்க்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளரின் அவசரத்திற்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது. காலம் தேவையாகும். எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ள மாட்டோம். அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம் என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்