தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யபட்டால் அது குறித்து பரிசீலிக்கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.இந்த திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக சம்பந்தனும், சுமந்திரனும் எந்த அடிப்படையில் கூறினார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த சட்டத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு விளக்கமளித்திருந்தார்.

இதேவேளை, பெரும்பான்மையின கட்சிகளை வடக்கு, கிழக்கில் நிலை நிறுத்துவதற்கான முயற்சியே 20 ஆவது திருத்தச் சட்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தவறான எண்ணங்களின் அடிப்படையிலான இறுக்கமான சிங்கள, பௌத்த எண்ணக்கருவை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்