உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மன்னார் – சிறு நீலாசேனை கிராமத்திலுள்ள புனித யாகப்பர் ஆலயத்திற்கு சொந்தமான ‘புனித யாகப்பர் திருச்சொரூபம்’ அடையாளம் தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, நொச்சிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட புனித யாகப்பர் திருச்சொரூபம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதிக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் கண்ணாடி பெட்டியை உடைத்து உள்ளே இருந்த புனித யாகப்பர் திருச்சொரூபத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்