உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்போரின் இறுதியில் காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நடந்ததென்பதை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் துங்- லாய் மார்கே தலைமையிலான, ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

பிரசல்ஸ்சிலிருந்து வருகை தந்த குறித்த குழுவானது சிறிலங்காவின் பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டு நடத்திய ஆய்வின் இறுதியில் நேற்று சிறிலங்காப் பிரதமரைச் சந்தித்தது.

இச்சந்திப்பின்போது, “மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்கள், சுற்றாடல் தரநியமங்கள் போன்றவற்றில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது.

மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அரசாங்கத்தின் சிறந்த ஒத்துழைப்பு இருந்தது.

இருப்பினும் முக்கியமான விடயங்களில் சிறிலங்கா இன்னும் முன்னேறவேண்டியுள்ளமை முக்கிய கரிசனையாகவுள்ளது.

சித்திரவதைகள் நிறுத்தப்படவேண்டியது முக்கியம். அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றியமைத்தல் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்.

போரின் முடிவில் காணாமல் போனவர்களின் கதி என்னவென்று தெளிவுபடுத்தப்பட வேண்டும்.’ என்றும் இந்தச் சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்