உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்பல நூறு கோடி பணத்தில் ஆலய திருப்பணிகளை பஞ்சவர்ண ஆடம்பர அலங்கார வேலைப்பாடுகளுடன் மேற்கொள்ளவிருக்கின்றீர்கள்.ஆகவே,தங்களிடம் வேண்டிக்கொள்வது யாதெனில்,
1. அம்பாளின் விஸ்வரூப சீற்றத்தை தணிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து செய்ய      வேண்டிய பரிகார யாகத்தை முதற்கண் செய்வீர்களா?
2. திருப்பணிக்கு பல நூறு கோடிகள் செலவு செய்வதற்கு தகுதிவாய்ந்த தாங்கள் ஆலய வளவிற்குள் வீடுகள் அமைத்து வாழும் நிலத்தை அம்பாளுக்கு அன்பளிப்பு  செய்துவிட்டு ஆலய சுற்றாடலுக்கு அப்பால் சென்று குடியிருப்பீர்களா? இது ஆலய தூய்மையை பேணுவதற்கு முக்கியமானதாகும்.

3. ஊர் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் தப்பபிப்பிராயங்களை களையுமுகமாகவும், அனைத்து மக்களும் திருப்பணிகளில் கலந்துகொள்ளுமுகமாகவும் மக்கள் அங்கீகாரம் பெற்ற “திருப்பணிசபை” ஒன்றை பகிரங்கமாக அமைத்து திருப்பணிகளை மேற்கொள்வீர்களா?
4. மூன்று தேர்களை அமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள்.மூன்று தேர்களையும் நிறுத்துவதற்கும்,அவற்றை பராமரிப்பதற்கான கூடாரங்களை அமைப்பதற்கும் போதிய இடவசதி ஆலயத்தில் இருக்கின்றதா? இன்னும் சில வருடங்களில் தேர்களை இழுப்பதற்கு போதிய அடியார்கள் இருப்பார்களா? என்பதுவும் சிந்திக்க வேண்டிய விடயமே.
5. தற்கால பணபலத்தால் உருவாகவிருக்கும் பஞ்சவர்ண ஆலயம் சில வருடங்களில் பஞ்ச வர்ணங்களின் மெருகு குன்றியபின்னர் மீண்டும் மறு சீரமைப்பு செய்வதற்கு போதிய பணபலம் மக்களிடம் இருக்குமா? என்பதற்கு காலந்தான் பதில் கூற வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் ஆலயங்களுக்கு ஒரு வர்ண அல்லது இரு வர்ணங்களாலேயே ஆலய கட்டிட அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஏன் நல்லை கந்தன் ஆலயம்,திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் எவ்வாறு அமைக்கப்பட்டிர்க்கின்றன.
6. இந்தியாவிலிருந்து கட்டிடக் கலைஞர்களை வரவழைக்காது எமது நாட்டில் வாழ்கின்ற கட்டிட கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமே?
எனது இந்த வேண்டுதல்களுக்கு ஆக்கபூர்வமான பதில் அளிப்பீர்களென நம்புகின்றேன்.
அம்பாளின் சீற்றம் “ஆகம நெறி முறைகளுடனான வழிபாடுகளாலா அல்லது அதியுச்ச பணபலத்தினாலான பஞ்சவர்ண அலங்கார திருப்பணிகளாலா” தணியும் என்பதை தாயே அறிவா.. ஓம் சக்தி பராசக்தி!
சி.சிவானந்தம்.

3 Responses to “அம்பாள் ஆலய தர்மகர்த்தாக்களிடம் பணிவன்பான வேண்டுகோள்!”

 • Sivan:

  பூசலால் நாயனாருடைய கோயில் அவருக்கு பரமபத முத்தியை கொடுத்த காலத்தால் அழியாத கோயிலாகும்.இந்த கோயில் கவர்ச்சியினால் மக்கள் மனதை கவர்ந்து காசு உழைக்க முயற்சிக்கும் காலத்தால் கலை மங்கிவிடும் கணணி விளையாட்டால் மலர்ந்த கோயிலாகும். ஆதலாலே அம்பாளும் தன் சீற்றத்தை அதிகரித்துள்ளாபோலும். பணபக்தியா? தூய இறைபக்தியா? வெற்றியடையும் என்பதை அம்பாளே அனைவருக்கும் விரைவில் உணர்த்திடுவா. ஓம் சக்தி பராசக்தி!

 • vadivelan canada:

  இது பூசலை நாயனார் கட்டிய கோயிலாகவும் இருக்கலாம் அல்லவா .

 • ranji:

  அம்பாள் ஆலய தர்மகர்த்தாக்களே! அம்பாளின் அருட்பேராற்றல் கருணையுடன் கேட்கிறேன்.
  நீங்கள் ஆலய தர்மகர்த்தாக்களா? அல்லது கல்நெஞ்சகாரர்களா? தொடர் மரண அவலத்துக்கு விடைகாண்பீர்களா? அல்லது ஆலயத்தை மக்களிடம் ஒப்படைப்பீர்களா? விடை தருவீர்களா?
  ஊர்மக்களே! தங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அம்பாளின் படத்தை வைத்து விளக்கேற்றி தினமும் வழிபடுங்கள். தாயின் சீற்றம் அதிகரித்திருப்பதனால் அவலங்கள் பல அனைவருக்கும் ஏற்பட இருக்கிறது.அம்பாளை சாந்தப்படுத்துவதானால் ஆலயத்தில் விசேட ஹோமம் நடாத்தப்பட வேண்டியது அவசியம்.இந்த யாகத்தை நடாத்துவதற்கு ஆலய தர்மகர்த்தாக்கள் தகுதியற்றவர்கள்.தகுதி வாய்ந்த குருமார்கள் மூலம் யாகத்துக்கான சகல ஒழுங்குகளையும் செய்ய நான் தயாராகவுள்ளேன். ஆனால் ஆலய தர்மகர்த்தாக்கள் தங்கள் ஆணவ பிடியை தளர்த்தி விட்டுக்கொடுப்பார்களா? விடைகாண வேண்டியது மௌனம் காக்கும் மக்களின் கடமையாகும். ஓம் சக்தி பராசக்தி!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்