உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கண்ணைமூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

மாகாணசபையின் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், புளொட் போன்ற அமைப்புக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச்செய்தனர். தமிழரசுக் கட்சி மாத்திரம் ஆதரவாக வாக்களித்தது.

இச்சட்டத்தின்பிரகாரம், மாகாணசபைக்கான தேர்தல்களை 50வீதம் தொகுதி வாரியாகவும், 50 வீதம் விகிதாசார முறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும்.

ஏற்கனவே, 60வீதம் தொகுதி வாரியாகவும் 40வீதம் விகிதாசாரமுறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முஸ்லிம் காங்கிரசும், மலையக் கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதனையடுத்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே தொகுதிவாரியாக 50வீதமும், விகிதாசார ரீதியில் 50 வீதமும் எனக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாற்றம் செய்வதற்கான பேச்சுக்களில் தமிழரசுக் கட்சி கலந்துகொண்டது. ஆனாலும் அரசாங்கம் முன்னர் பரிந்துரைத்த 60க்கு 40 என்ற முறையை ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கியது.

முஸ்லிம் கட்சிகளும், மலையக கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி 50:50 என்ற முறையைக் கொண்டுவந்திருக்காவிட்டால் வட – கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் பெரும் சிக்கலை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி கண்ணை மூடிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்த சட்டமூலத்திற்கு 154 வாக்குகள் ஆதரவாகவும் 43 வாக்குகள் எதிராகவும் பெறப்பட்டன. கூட்டு எதிர்கட்சியும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்