உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் அம்பாறையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான விமலவீர திஸாநாயக்கவின் கார் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளை செலுத்தியநபர் உயிரிழந்துள்ளார்.

எனினும் படுகாயமடைந்த மற்றைய நபர் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து இடம்பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க அவரது காரினுள் இருந்த போதிலும் சம்பவம் தொடர்பில் அவரது காரைச் செலுத்தியவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்