Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நோர்வே வாழ் எம்மூர்மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட கடந்த அறிக்கையில் எம் அமைப்பிற்கான பெயர் பற்றி கருத்து உருவாக்கப்பட்டது. வரும்(09.04.11) பொதுச்சபைக் கூட்டத்தின் போது தான் அது விவாதத்திற்கு விடப்பட்டு முடிவு எடுக்கப்படும் என முதற்கூட்டியே அறிவிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இடைக்கால அறிக்கைகள் வெளிவிடும் போது ’நோர்வே வாழ் பண்டத்தரிப்பு மக்கள் அமைப்பு‘ என விழிக்கப்பட்டது உண்மையே இதில் பண்டத்தரிப்பு என குறிப்பிடப்பட்டதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை.
இக்கருத்தில் panipulam’க்கோ அல்லது வேறு நபருக்கோ ஏதாவது சந்தேகம் இருந்தால் எமது அமைப்புடன் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு இருக்கலாம்தானே? அதை விடுத்து எம்மிடையே இலைமறைகாயாக இருக்கும் ஒருசில அழிவுபுர்வமான பிரிவினைவாத கருத்துகளை முன்வைத்து ஒரு விவாத மேடையையே இணையத்தில் நடத்தி எங்கள் அமைப்பை முளையிலேயெ கிள்ளி எறிய நினைக்காதீர்கள்.
உங்கள் இக்கருத்து இன்று நேற்று உருவனது அல்ல இது எங்களுக்கு முன் சென்ற ஒவ்வொரு சந்ததியும் ஏதோ ஒரு கட்டத்தில் இதை ஏதோ ஒரு நிலையில் வாதப்பட்டுத்தான் இருப்பார்கள். இன்று நீங்கள் எங்கள் புலம்பெயர்ந்த இளம் சமூகத்திலும் இப்பிரிவினையை விதைப்பதற்க்கு முயல்வதாகவே நாங்கள் எண்ணவேண்டி உள்ளது.
தயவு செய்து எனிவரும் காலங்களில் ஆவது இப்படியன முன்னேற்றகரமற்ற கருத்துகளை முன் நிறுத்தி எங்களது ஒற்றுமையையும் முன்எடுப்புகளையும் குலைக்க வேண்டம்.
எங்களுக்குத்தெரியும் நீங்களும் எங்கள் ஊரின் முன்னேற்றத்தயே விரும்புவீர்கள்  எண்டு அதனால் ஏன் நீங்கள் பின்வரும் ஆக்கபூர்வமன கருத்துகளையும் நீங்கள் உங்கள் கட்டுரைகளில் எடுத்து ஆராயலாம் தானே?
1) எங்கள் ஊரில் உள்ள ஆண் பிள்ளைகள் ஏன் மேல்படிப்பு படிப்பதாற்க்கு பின் நிக்கின்றனர் ?
2) எங்கள் ஊரில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு எப்படி வேலை வாய்பை ஏற்ப்படுத்திக்கொடுக்கலாம்?
3) புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எம் இளம் சந்ததியினர் உயர்படிப்புகள் படிக்க நாங்கள் என்ன செய்யலாம்? …
வரும் காலங்களில் எதையிம் ஆற அமர இருந்து ஆலோசித்து கருத்து எழுதுமாறு எல்லோரையும் தாழ்மையகக் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
நிh;வாகம் 2011

3 Responses to “எமது ஊர் மக்களுக்கு….”

  • R.SUKI பன்னூர் மக்கள் ஒன்றியம்:

    அன்பனே எமது நோர்வ வாழ் அன்பு உறவுகளே 09 ..04 ..11 -உங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் எத்த விதமான பிரச்சனே இல்லாமல் எல்லோரும் ஒன்றுமேயாக இருத்து செயல் படுங்கோ வாழ்த்துக்கள் மற்றும் பால அண்ணாவின் ஆர்வத்துக்கு எனது பரண்டுக்கள் முதல் எங்களுக்கில் இருக்கும் முரண்படுகள காலத்து ஒன்றுமேயாக எல்லோரும் செயல்படுவெம் மற்றும் எனது பனிப்புல நேற்றுக்கு முதல் கண் நன்றிகள் பன்னூர் மக்கள் ஒன்றியம்

  • T.BALA. pannipulam:

    நோர்வா மக்கள் முதல் வெளிவந்த கட்டுரையை நன்கு இன்னும் ஒரு முறை மீண்டும் படித்து பார்க்கவும்.பணிப்புலம் என்று சொல்லத்தவறுபவர்களை மட்டுமே அக்கட்டுரை மூலம் ஏன் தயக்கம் என தான் கேட்க்கபட்டது.இதற்க்கு உதாரணமாகத்தான் நோர்வே பண்டத்தரிப்பு மக்கள் என ஏன் குறிப்பிடப்படுகிறது என்றும் ஏன் இவர்கள் பிறந்த ஊரின் பெயர் போடவில்லை என்பதே அடுத்தகேள்வி.இதற்க்கு நீங்கள் இணையத்தில் கருத்தை அல்லது உங்கள் ஆட்ச்சேபிப்பை தெரிவித்திருக்கலாம்.நோர்வே சங்கத்தின் பெயர் வைப்பது அவர்கள் வாழும் நாட்டில் இருக்கும் மக்கள் முடிவே.ஒரு வேளை உங்கள் சங்கம் அனைத்து பண்டத்தரிப்பு மக்களை உள் அடக்கியிருக்கும் என நான் நினைக்கின்றேன்.நமது இணையம் சுதந்திரமான கருத்துக்கு இடமளிப்பதால் எவரும் தங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கலாம்.அதன் அடிப்படையில் தான் அந்த கட்டுரைக்கும் 115 நபர்கள் தங்கள் கருத்து தெரிவித்தார்கள்.உங்கள் சமுதாய நோக்கம் கொண்டே முதல்க்கட்ட வேலையாக வாசிகசாலை திருத்தவேலை.தொழில்வாய்ப்புஉருவாக்கம் பற்றி பல திட்டங்கள் பலர் முன் வைத்தார்கள்.ரணா,பாலா,நேசன்,பகி, இவர்கள் இதுபற்றிய பல யோசனைகள் வெளியிட்டார்கள்.எங்கள் எண்ணமும் ஊர் நோக்கியே.நோர்வே மக்களை நோகடிக்க மட்டும் எழுதப்பட்ட கட்டுரை அல்ல இது ஒட்டு மொத்தமாய் ஊரின் பெயரை மறைத்து எவனோ ஒருவன் ஊரை சொல்லுபவர்களுக்கே. நன்றி பணிப்புலம் த.பாலகுமார்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்::

    என் கருத்துக்கள் எவரையும் புண்படுத்தும் நோக்கின் அடிப்படையிலோ முக்கியமாக இந்த இணையத்தையோ குறிப்பாக Norway எம்மூரவர்களின் ஒன்றியத்தையோ இழிவோ, அவமானமோ, அல்லது அவர்களின் பெயர்சூடும் விடயத்தில் தலையீடும் அடிப்படையிலோ அமையவில்லை என்று கருதிக்கொண்டு. நான் முதல் குறிப்பட்டது போல் கருத்துபரிமாறல் ஒரு ஆரோக்யமான விடயம், அதை கையாளும் முறையைபொருட்டு: எனது கருத்துக்கள் சில நகைச்சுவை நோக்குடன்தான் எழுதப்பட்டது என்று – ஒருவரையோ மற்றவர்களின் இறையாண்மையை இழிவுபடுத்தும் அடிப்படையில் அமைந்ததாக இல்லை என்று கூறி. இருந்தும் என் கருத்துக்கள் சில யாரையோ, எந்த அமைப்பையோ புண்படுத்தி இருந்தால் மன்னிக்கும் வண்ணம் கேட்டுகொள்கிறேன். இதற்கு அப்பால்பட்ட விடயம் இந்த இணையம் ஒரு சிலரின் தனிக்கருத்தை தீர்மானமாக வைத்து இணைய நிர்வாகத்தினர் மனம்வருந்துமளவுக்கு இது சரியான காரணம் இல்லை என்பது என்கருத்து. அத்துடன் நேயர்களின் பலவகை கருத்துகளிற்கு இணையம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக்கொள்வதும், அத்துடன் குற்றவுணர்வு புரிவதும் ஞாயமான காரணம் இல்லை என் யோசனை. இந்த நல்ல சேவை மேலும் தொடர என் நன்றிகளுடன் வேண்டுகோள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்