உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கைதிகள் மூவரும் நேற்றுக்காலை முதல், தாம் அருந்தி வந்த குடிநீரையும் மறுத்து போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவர்கள் உடல்சோர்வுற்று மயக்கமடைந்தனர். இதனையடுத்தே சிறைச்சாலை நிர்வாகம் குறித்த அரசியல் கைதிகளை அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளது.

முன்னதாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து குறித்த கைதிகள் அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்