7 Responses to “2stepslim”

  • Truthfully, http://make1250weekly.info really does work holy hell. I’m still shocked – last evening I was blessed with $348.77 in earnings. I$ can’t believe it’s taken me so long to come around.

  • v.venkatesan:

    தேங்க்ஸ்

  • உங்கள் அனைத்து கருத்துக்கள்ளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் றூபன் நந்தினி 647893 1219 நன்றி

  • A

    A
    உடல் பருமனைக் குறைக்க…

    உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா? என்றால் அதுதான் இல்லை. இருப்பினும் உடல் பருமனாக இருப்பவர்கள் தங்கள் எடையைக் குறைக்க விரும்புகிறார்கள். உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது. படிப்படியாக உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

    1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

    2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

    3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

    4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

    5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    6. உப்பின் அளவையும் குறைக்கவும்

    7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை வயிற்றுக்குள் திணிக்க வேண்டாம்.

    8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

    9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராகக் கடைப்பிடிக்கவும்.

    10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும்.

    11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

    12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்.
    – மேற்காணும் 12 பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் உடலின் எடை குறைவதையும் பார்ப்பீர்கள். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    Issu#1உடல் பருமனை குறைக்க டிப்ஸ்

    பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி தந்தாலே போதும் தசைத் திசுக்கள் அதிகரிக்கும். இதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும்.
    உடற்பயிற்சி இல்லாததால் உடற்பருமன் ஏற்பட்டிருந்தால் நடத்தல், நீந்துதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.
    15 நிமிடங்கள் நடந்தாலே போதும் சுமார் 60 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் காலைப் பொழுதில் நடந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்பு விரைவில் எரிக்கப்படும். இதய நோய் இருப்பவர்கள், கால் மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
    நேரத்திற்குச் சாப்பிடுவது முக்கியமானது. ஒரே நேரத்தில் அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, அவ்வப்போது சாப்பிட்டால் கொழுப்பு தேங்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. இவ்வாறு சிறுகச் சிறுகச் சாப்பிடுவதால் ஜீரணம் எளிதில் நடந்து உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
    கொழுப்புச் சத்துக்களை விட கார்போஹைட்ரேட் பொருட்கள்தான் சீக்கிரமாக எரிக்கப்படும். எனவே கொழுப்புச் சத்துள்ள பொருட்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.
    சாப்பிட்டவுடன் படுத்துவிடாமல் சிறிது தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் ஜீரணத்திற்கு உதவியாகவும், காலையில் எழும்போது மந்தத்தன்மை இல்லாமலும் இருக்கும். கொழுப்பும் தேங்காது. நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது.
    பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரிடம் பேசுவதென்றாலும் கூட செல்ஃபோனை எடுத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம். தோட்டம் இருந்தால் காலையிலோ மாலையிலோ சிறு சிறு வேலைகளைச் செய்யலாம்.
    இதேபோல, பக்கத்தில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு நடந்து சென்று அவற்றை வாங்கி வரலாம். அலுவலகத்தில் லிஃப்டுகளைப் பயன்படுத்தாமல் படிகளின் மூலம் ஏறி இறங்குவதாலும் கூட தேக்கிவைக்கப்பட்ட கொழுப்பு வேகமாக எரிக்கப்பட்டு உடல் நலம் சீராகும்.
    இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் உடம்பில் கொழும்பபுச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடற்பருமனையும் தவிர்த்துவிடலாம். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    Issu#2உடல் பருமன் குறைய…
    1. வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

    2. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

    3. மோரில் வெந்தய பொடி கலந்து குடிக்கவும்.

    தலைவலி, சைனஸ்,குளிர்ச்சியான உடம்பு காரர்கள் பார்த்து சாப்பிடுங்கள்.

    (வெந்தயம் குளிர்ச்சியானது)

    4. கொள்ளு சாப்பிட்டால் கூட வெயிட் குறையும்.

    (கொள்ளு சூடு)

    கொள்ளு ரசம்,கொள்ளு இனிப்பு சுண்டல்,கொள்ளு சூப் போன்றவைகள் சாப்பிடலாம்.

    5. வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி இஞ்சி, எலுமிச்சம்பழச் சாறு, பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

    6. இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும் நன்கு அரைத்து குடித்து வர ஒரு வாரத்திலிருந்து உடல் இளைக்கத் துவங்கிவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.

    7. சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன்மேல் தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை சேகரித்து தினமும் 100 கிராம் அளவுக்கு அதில் நன்றாகத் தண்ணீர் விட்டு கழுவி சர்க்கரை சேர்த்து 3 வார காலம் சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு இளைக்கும்.

    8.பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    Issu#3உடல் பருமனைக் குறைக்க உதவும் கொடம்புளி பழம்

    உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.
    பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு நாம் உண்ணும் உணவில் உள்ள உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதுதான் முக்கிய காரணமாகிறது.

    உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடப்பது, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது தவறானதாகும். உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும். அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள்.
    இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது. உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    Issu#4உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!
    இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.
    தக்காளி இரசம்
    நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.
    பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.
    சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும்; நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும். நன்றி
    உடல் பருமன் குறையும்!
    100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20தான். எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.
    உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.
    இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம்.
    தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.
    தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது. நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    iss#5உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம் ??!!

    எப்படி எல்லாம் பாடுபட்டு வளர்த்த உடம்பை இப்படி பாடுபட்டு
    எழுதி குறைக்க வழி சொல்லவேண்டியதா இருக்கு!! அவ்வ்வ்வ்.!!!

    நாம் பயன்படுத்தும் துணிகளின் அளவு ஆண்களின் இடுப்பளவு
    முப்பத்தி எட்டு இன்சுக்குக் குறைவாகவும், பெண்களின் இடுப்பளவு முப்பத்தி ரெண்டு இன்சுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
    அந்த அளவுக்குள் இருந்தால் தான் ஆரோக்கியம். ஆனால்
    இன்றைக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ், டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ், ட்ரிபிள்
    எக்ஸ்ட்ரா லார்ஜ் என கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கி-
    றோம். இதெல்லாம் நோயில் கொண்டு போய்தான் முடியும். உடல்
    எடை அதிகரிப்பால் மூட்டுவலி, இடுப்பு வலி இன்னபிற வியாதிகள்
    நம் சொந்தமாகிப் போகும்.

    நம்மில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகும் வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுவார்கள்.
    இதற்கு ‘மனைவி வந்த பூரிப்பு!’. ‘வீட்டு சாப்பாடு’ என்றெல்லாம்
    நமக்கு நாமே சொல்லும் சமாதான காரணங்கள். வயிறு கெட்டு
    விடும் என்று பார்த்துப் பார்த்து சாப்பிட்டவர்கள் அதிக அளவு
    உண்பார்கள். இது தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். நன்றி

    சென்டர் ஒபிசிட்டி:

    கால்கள் கைகள் மார்பு பகுதி எல்லாம் சின்னதாக இருக்கும். வயிறும் பின்பக்கமும் வீங்கி பெருத்திருக்கும். இதற்கு ‘சென்டர் ஒபிசிட்டி’ என்று பெயர். நம் ஊரில் இப்படிப் பட்டவர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். சமையல் எண்ணெய் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவது. அளவில்- லாமல் கண்டபடி சாப்பிடுவது, ஸ்டைலுக்காக சிகரெட், நண்பர்களோடு பார்டி என்கிற பெயரில் பீர் என்கிற பழக்கத்தை எல்லாம் விட்டுவிட வேண்டும்.

    உணவுக் கட்டுப்பாடென்பது:

    அறவே சாப்பிடாமல் வயிற்றை/வாயைக் கட்டுவதென்பதல்ல. மூன்றுவேளை சாப்பாட்டை ஐந்து வேலையாகப் பிரித்து மூன்று மணி நேரத்திற்க்கொரு முறை அளவோடு நம் உடலுக்கு ஜீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடனும். நான் ஆபீஸ் போறேன், வெளியே போறேன் அப்படி இப்படி என்ற காரண மெல்லாம் ரிஜெக்டெட். நம் உடம்புக்குத் தானே நாம் செய்கிறோம் என்ற அக்கறை மனசில் வேணும். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு என்று கால்குலேட் பண்ணியே சாப்பிடுங்க. ஒருதடவை உங்கள் அருகிலுள்ள டயடீசியனை அவசியம் கன்சல்ட் செய்துக் கொள்ளுங்க! பிரச்சினைகள் ஏதுமிருக்காது.

    உடலுக்கு எல்லாவித சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவது தான் நல்ல வழி. அதனால் சத்தான சாப்பாட்டை
    எப்பவுமே மிஸ் பண்ணிடாதீங்க. சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி
    மாற்றிக் கொண்டே இருப்பது நம் உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டு
    வெச்சு அதை ஸ்ட்ரிக்ட்டா கடைப் பிடிக்கணும். சத்தான உணவு
    சரியான நேரம் இது தான் டயட் சீக்ரட்.

    நாம் வாழும் முறை உண்மையிலேயே சரியானதாக ஆரோக்கிய
    மானதாக இருக்கிறதா?

    இது நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. இதயம்
    சம்பத்தப் பட்ட நோய்களுக்கு பிளட் பிரஷர் + டயாபடிஸ் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. சுகர் நோய் பரம்பரையாகத்
    தொடரக் கூடியது என்றாலும் பலபேர் இந்த வகை நோய்களை
    கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் கடைசிவரை
    அலட்சியமாகவே இருக்கிறோம். (ஏதோ சொந்த பந்ததை விட்டுப்
    பிரிந்து விடுவோமோ என்ற ஏக்கம் போல!)

    அதே சமயம் டீன் ஏஜில் இருந்தே நம் லைஃப் ஸ்டைலை
    முறைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

    எப்படி? இது நல்ல கேள்வி?

    ஆண்டுக்கு ஒருமுறை இதய நோய்களுக்குக் காரணமான BP + சுகர் பரிசோதனைகளைச் செய்து விடுங்கள். ஆறுமணி நேரமோ எட்டு
    மணி நேரத்திற்கு மிகாமலோ தூக்கமும், நாற்பது நிமிடத்திலிருந்து அறுபதே அறுபது நிமிடநேர உடற்பயிற்சியுடன் கூடிய நடை
    பயிற்சி அயற்ச்சியில்லா தேக ஆரோக்கியத்தைத் தந்து உடல்
    எடையை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும். “இதற்கெல்லாம்
    எங்கே சார் நேரம் இருக்கு?” என்று டேக்கா கொடுக்க
    நினைக்காதீங்க!!

    நீங்கள் நிச்சயமாய் ஆபீசுக்கோ மற்ற எந்த வேலைகளுக்காகவோ வெளியே தெருவே சென்று வருபவர்களாகத் தானிருப்பீர்கள். பஸ்
    வேன் ஆட்டோவில் செல்பவர்களானால் இறங்க வேண்டிய
    இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டரோ, அல்லது ஒரு கிலோ
    மீட்டருக்கு (உங்களால் நடந்து வரக் கூடிய அளவுள்ள தூரத்துக்கு) முன்பாகவே இறங்கி நடந்தே ஆபீசுக்கோ மற்ற எந்த வேலை களுக்காகவோ போங்களேன். டூ வீலர் வைத்திருப்பவர்கள் நடந்து
    போகிற தூரத்திற்கு நடந்தே போகலாமே!

    ஆபீஸ் ரெண்டாவது மூன்றாவது மாடியிலோ இருக்கிறதா? அதற்காக பெருமூச்சு விடாதீர்கள்.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி இறங்குங்கள். டயர்டாக இருக்கிறதா? அதற்காகத் தான் மேலே சொன்ன சத்தான சாப்பாடு. இப்போது புரிந்திருக்குமே!

    சார் உங்களால் மேலே சொன்ன எதையுமே செய்ய முடியா
    விட்டால் தினமும் இருபது நிமிடம் நீச்சல், அல்லது முப்பது
    நிமிட சைக்கிளிங் அல்லது நாற்பது நிமிட வாக்கிங்…இதில் ஏதாவதொன்றை வாரத்தில் ஐந்து நாட்கள் செய்யப் பழகினாலே
    போதும்.

    ரிமோட் உங்களின் எதிரி! எழுந்து போய் சேனலை மாற்றப்
    பழகுங்கள். ரிமோட் பேட்டரியை கழற்றி விட்டால் உங்கள்
    குடும்பத்துக்கே நல்லது செய்தவர்கள் ஆவீர்கள்!

    இறுதியாக-

    இதய நோய்கள் காஸ்ட்லி நோய்கள். இவற்றுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகளும் காஸ்ட்லி வைத்தியம் தான். இவற்றை அருகிலேயே சேர்க்காமல் தடுக்கின்ற இலவச மருந்துகள் தான் மேலே சொன்ன
    பழக்க வழக்கங்கள். இதை புரிந்துகொண்டாலே போதும்! நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    issu#6நன்றாக வேகவைத்த முட்டை சாப்பிடும் போது நமது உடல் எடை குறைகிறது என்கிறது ஆராய்ச்சி

    அழுத்தி பிடித்தால் உடைந்துவிடும் மெல்லிய ஓடுஆடையின் உள்ளே மொழு மொழு மஞ்சள், வளவளப்பான வெள்ளை என கவர்ச்சிகரமாக கூட்டணியில் ஏகத்து சத்துக்களை பொக்கிஷமாக குவித்து வைத்திருக்கும் பெட்டகம் தான் முட்டை!

    மூளை வளர்ச்சிக்கு முட்டை:- நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy
    கொழுப்பு போன்ற இரண்டுவகையான சமாச்சாரங்கள் தான் (Phosphatidylcholine and sphingomyelin) மூளையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து மூளையின் செயல்பாட்டையும், நலனையும் பாதுகாக்கும் ஆட்சி பொறுப்பை செய்கிறது. அந்த பணிக்கு சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்யும் (methylation) பணிக்கு முட்டையில் உள்ள கொளின் (Choline) “மூளை”யாக செயல்படுகிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து தசைகளுக்கு தரப்படும் சமிக்கை உத்திரவுகளை கொண்டு சேர்க்கும் காதல் தூதுவன் அசிட்டைல்கோளின் அவர்களின் மூலப் பொருளாகவும் இருக்கிறது. சத்துணவில் முட்டை நமது வருங்காலத்தின் விதை! அதொடி ஒமேக்கா 3 கொழுப்பு, அத்தியவசிய அமைனோ அமிலங்கள், விட்டமின்கள் ஏ, டி, இ, பி2 ,பி1,பி12 , புரதம், மாவு சத்து, பல தாதுஉப்புக்கள் என பல குவியல்களை உள்ளடக்கியது முட்டை!
    ஆஃப் பாயில் முட்டை:-

    மெல்லிய வெண்மை நிற விரிப்பில் மெத்தென புடைப்பாகவும் பளபளப்பாகவும் மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாகவும் ஆங்காங்கே கருப்பு கீற்றுகளும் ஒருங்கிணைந்த அதை லாவகமாக கையாண்டு ஒரே சுருட்டில் வாயினுள் நுழைத்து சுவைக்கும் போது பெப்பரின் வாசனையும், முட்டையின் மென்மையான சுவையும் அருமை அருமை! உடல் எடையை அதிகரிக்க, கட்டுமஸ்தான உடலாக கொண்டுவர பலராலும் சாப்பிடப்படுகிறது. சாலமனோலா என்ற கிரிமிகள் பாதிக்கபட்ட கோழியிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இந்த கிரிமிகள் இருக்க வாய்ப்புள்ளது. இது மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் தோல் சம்மந்தப்ட்ட வியாதிகளும் வரவாய்ப்புள்ளது. புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் பச்சை முட்டையையோ அல்லது ஆஃப் பாயில் முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும். மூச்சு திணறல் அறிகுறி தோன்றலாம்!
    நன்றாக வேக வைத்த முட்டை:-
    முட்டையில் 211 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்றாலும் முட்டையில் உள்ள லெசித்தின் என்ற பொருள் உடல் கொலஸ்ட்ராலை கிரகிப்பதை தடைசெய்து விடுகிறது எனவும் கொலஸ்ட்ரால் நன்றாக வேகவைக்கப்படும்போது ஆக்ஸிடேசன் ஆகி கொலஸ்ட்ரால் என்ற பூச்சாண்டியை துரத்திவிடுகிறது எனவும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றது.
    முட்டையை வேக வைப்பது எப்படி?
    எத்தனை முட்டைகளை வேக வைக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தை தெரிவ செய்து அதில் முட்டைகளை போட்டு முழுகும் வரை தண்ணீரை ஊற்றவேண்டும். முட்டைகளை நெருக்கமாக அடுக்க கூடாது. கொதிக்கும் போது ஒன்றோடு ஒன்று மோதி உடைந்துவிடும். முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் முட்டை அடங்கிய பாத்திரத்தை வைத்து அதில் உள்ள தண்ணீர் கொதிக்கும் நிலை வரும் வரை காத்திருந்து பாத்திரத்தை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு ஸ்வாலையை குறைத்து வைத்து 12 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பெரிய முட்டைகளாக இருந்தால் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.பின் குளிர்ந்த நீருக்கு முட்டைகளை மாற்றி குளிரவைத்து ஓட்டினை உரித்து உஜாலா போடாமலேயே பளிச்சிடும் வெண்மையில் உள்ள முட்டையை சாப்பிடலாம்.
    பாத்திரத்தில் போடும் முன் முட்டையில் கெட்ட வாசனை உணர்ந்தால் அதை பயன்படுத்தக்கூடாது.
    முட்டையில் வெடிப்பு, கீரல் இருந்தால் அதையும் விலக்கவேண்டும்.
    ஒரு சமமான தரையில் முட்டையை சுழலவிட்டால் ஒரே சீராகா சுற்றாமல் தடுமாறினாலும் அது கெட்டுபோனதாக இருக்கலாம்.
    தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்கும் முட்டைகளை விலக்கவேண்டும்.
    தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் முட்டையிலிருந்து குமிழ்கள் வெளிப்பட்டாலும் அந்த முட்டைகள் பயன்படுத்தக்கூடாது. முட்டையில் கீரல் உள்ளது என்ற அடையாளம்!
    முட்டையின் ஓடு கெட்டியாக இல்லாமல் ரப்பர் போல் இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.
    நன்றாக வேக வைத்த முட்டையும் கலோரியும்:-
    வேக வைத்த முட்டையில் அனைத்து சத்துகளும் குறைவில்லாமல் உள்ளது. 77.5 கலோரிகள்,, 5 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் செச்சுரேட்டடு கொழுப்பு, 190 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 55 மில்லி கிராம் சோடியம், 1கிராம் மாவுசத்து, 1கிராம் இனிப்பு சத்து, 6 கிராம் புரதச்சத்து, 20 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்து என அடுக்கி கொண்டே போகலாம்.
    நன்றாக வேகவைத்த முட்டையில் 77.5 கலோரிகள் எரிப்பொருள் உள்ளது. இந்த முட்டையில் அனைத்து சத்துக்களையும் கிரகிக்க நமது உடல் 100 கலோரிகள் மேல் எரிப்பொருள் செலவழிக்கிறது. எனவே நன்றாக வேகவைத்த முட்டை சாப்பிடும் போது நமது உடல் எடை குறைகிறது என்கிறது ஆராய்ச்சி! நன்றி Drop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    Issu#6 திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?
    எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள். ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
    10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள்
    ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
    ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ஜே.பிரவுன் கூறியதாவது:-
    ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது.
    அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம்.
    அதனால், தினமும் மூன்றுவேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    Issu#7திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது

    திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.
    உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
    அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டிமித்ரி ட்யுமின் தலைமையில் உடல் பருமன் குறித்து சமீபத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
    1986ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடந்தது.
    ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் திருமணத்துக்கு பிறகும், ஆண்கள் விவாகரத்து ஆன பிறகும் உடல் எடை விறுவிறுவென அதிகமாகிறது. இதில் பெரும்பாலானவர்கள் 30 வயதை கடந்தவர்கள்.
    பெரும்பாலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது. இந்த நிலை 50 வயது வரை நீடிக்கிறது. திருமணம் ஆன 2 ஆண்டுகள் வரை அல்லது விவாகரத்தான 2 ஆண்டுகள் வரை இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் ஆகாதவர்களைவிட திருமணம் ஆனவர்கள் குண்டாகும் வாய்ப்பு அதிகம். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    உடல் எடை குறைக்க ஸ்லிம் ஆக எளிய டயட் டிப்ஸ்
    உடல் எடையையும் சீராக வைத்துக் கொண்டால்தான் அழகாக இருக்கு முடியும் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும். உடல் எடைக் குறைவுக்கு ‘அதைச் சாப்பிடக்கூடாது; இதைச் சாப்பிடக்கூடாது. ‘ என்று எத்தனையோ தடைகளை சொல்லியிருப்பார்கள். ஒரு அளவுக்கு மேல் வாயைக் கட்டுவது எனது கொஞ்சம் இயலாத காரியம்தான். எனவே சில எளிய வழிகளை இங்கே சொல்லியிருக்கிறேன். ஒரு நாளைக்கு மூன்று வேளை என்ற தியரியை முதலில் மாற்றுங்கள். 5 அல்லது ஆறு வேளைகூட சாப்பிடலாம். அலுவலக நேரம் ஒத்துவராது என்றெல்லாம் பயப்பட வேண்டாம்.வீட்டில் சாப்பிட வேண்டியத்தை சாப்பிட்டு விட்டு மீதி நேரங்களில் சிறு சிறு ‘ ஹாண்டீ டைப்’ தின்பண்டங்களாக ஹேண்ட் பாக்கில் வைத்துக் கொள்ளலாம்.
    உதாரணத்துக்கு சாண்ட்விச் ப்ரெட்கள், வீட்டில் கோதுமை மாவில் செய்த காய்கறி சேலட்டை உள்ளடக்கிய சப்பாத்தி ரோல் முதலியவைகளை டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைத்துக் கொண்டால், சட்டென எடுத்து 2, 3 வாய் பிய்த்துப் போட்டுக்கொண்டு போய் விடலாம்.
    வீட்டிலோ ஹோட்டலிலோ ரெகுலரான சாப்பாட்டை சாப்பிடும்போது , கட்டாயமாக பத்து நிமிஷம் முன்பு, பெரிய டம்ளரால்( டம்ளர் சிறியதாக இருந்தால், ரெண்டு டம்ளர் தண்ணீர் ) ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வளவுதான் சாப்பிடவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து அதை முன்கூட்டியே ஒரு சிறிய டிபன் பாக்ஸ் டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தட்டு காலியாக, காலியாக யாராவது போட்டுக் கொண்டெ இருக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அப்படி அனுமதித்தால், நாம் சாப்பிட நினைத்த சாப்பாட்டின் அளவு நம்மையறியாமல் அதிகமாகிவிடும். இதை ஒருபோதும் அனுமதிக்கலாகாது. எடைக் குறைப்பு ட்ரீட்மெண்டை ஆரம்பித்த அடுத்தநாளே நாம் சாப்பிடப் போகும் சாதத்தின் அளவை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். திடீரென குறைக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள வேண்டும். 2,3, தடவைகளாக வாரத்துக்கொருமுறையாக குறைத்து, கரெக்டாக நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கும் அளவை எட்டியவுடன், அந்த சாப்பாட்டை ஒருமுறையோ இருமுறையோ சாப்பிடுங்கள். வயிற்றைத் திணறிப்போகும் அளவுக்கு நிரப்பிக் கொள்ளவேண்டாம், என்பதே முக்கியமானது. ஒருநாளைக்கு திட உணவின் அளவு நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கும் அளவைவிட கட்டாயமாக மீறக்கூடாது. இதையும் மீறி உங்களுக்குப் பசித்தால், ஜூஸ், போன்ற பானங்களை அருந்தலாம். மற்றபடி பொதுவாக எடையைக் கூட்டும் பொருட்களை அறவே தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளலாம். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website www .ardysslife .com /jesmy

    Issu#8அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும் எனவே குறைவாக சாப்பிட வழி…

    அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும். எனவே குறைவாக சாப்பிட வேண்டும் என பலர் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் அது போன்று சாப்பிட முடிவதில்லை. அதற்கு ஒரு புதுவித வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள பிரபல இத்தாலி ஓட்டலில் உணவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஓட்டலில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவை எடுத்து சாப்பிட பெரிய அளவிலான முள்கரண்டியும், சிறிய அளவிலான முள் கரண்டியையும் கொடுத்தனர். அவர்களில் பெரிய முள்கரண்டியை பயன்படுத்தி சாப்பிட்டவர்கள் 20 சதவீதம் உணவை குறைத்து சாப்பிட்டனர்.

    எனவே, குறைவாக உணவு சாப்பிட வேண்டுமானால் பெரிய முள்கரண்டியை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது, ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பசியுடன் வருகிறார்கள். முள் கரண்டியால் எடுத்து உண்ணும் போது நீண்ட நேரம் சாப்பிடுகின்றனர். அதனால் அதிக அளவில் உணவு எடுத்து கொள்கின்றனர். பெரிய

  • http://www.youtube.com/watch?v=iQW90u3hYwQ&feature=ரேலடேத்
    Experience the Magic of Ardyss International. After 800% growth between 2009-2010 & offering amazing products like Body Magic & Levive. We are now into Phase… call 647-893-1219 visit http://www.ardysslife.com/jesmy..

  • உடல் பருமனை குறைக்க டிப்ஸ்

    பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி தந்தாலே போதும் தசைத் திசுக்கள் அதிகரிக்கும். இதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும்.
    உடற்பயிற்சி இல்லாததால் உடற்பருமன் ஏற்பட்டிருந்தால் நடத்தல், நீந்துதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.
    15 நிமிடங்கள் நடந்தாலே போதும் சுமார் 60 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் காலைப் பொழுதில் நடந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்பு விரைவில் எரிக்கப்படும். இதய நோய் இருப்பவர்கள், கால் மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
    நேரத்திற்குச் சாப்பிடுவது முக்கியமானது. ஒரே நேரத்தில் அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, அவ்வப்போது சாப்பிட்டால் கொழுப்பு தேங்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. இவ்வாறு சிறுகச் சிறுகச் சாப்பிடுவதால் ஜீரணம் எளிதில் நடந்து உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
    கொழுப்புச் சத்துக்களை விட கார்போஹைட்ரேட் பொருட்கள்தான் சீக்கிரமாக எரிக்கப்படும். எனவே கொழுப்புச் சத்துள்ள பொருட்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.
    சாப்பிட்டவுடன் படுத்துவிடாமல் சிறிது தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் ஜீரணத்திற்கு உதவியாகவும், காலையில் எழும்போது மந்தத்தன்மை இல்லாமலும் இருக்கும். கொழுப்பும் தேங்காது. நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது.
    பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரிடம் பேசுவதென்றாலும் கூட செல்ஃபோனை எடுத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம். தோட்டம் இருந்தால் காலையிலோ மாலையிலோ சிறு சிறு வேலைகளைச் செய்யலாம்.
    இதேபோல, பக்கத்தில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு நடந்து சென்று அவற்றை வாங்கி வரலாம். அலுவலகத்தில் லிஃப்டுகளைப் பயன்படுத்தாமல் படிகளின் மூலம் ஏறி இறங்குவதாலும் கூட தேக்கிவைக்கப்பட்ட கொழுப்பு வேகமாக எரிக்கப்பட்டு உடல் நலம் சீராகும்.
    இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் உடம்பில் கொழும்பபுச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடற்பருமனையும் தவிர்த்துவிடலாம். நன்றிDrop up to 3 sizes in five minutes உங்கள் வண்டி, சள்ளை, முதுகுவலி முதுகுகூநல் , இவைகளில் இருந்து விலக அழையுங்கள் றூபன் நந்தினி 647 893 1219 facebook : 2stepslim website http://www.ardysslife.com/jesmy

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Untitled-1 Celine_Birthday nnd-1 10394809_754328251280465_8318663758937740487_n copy unnamed Untitled-2 copy loonapix_13958839532598761500 Birthday - 1AE5e-127 - print nature_wallpaper_097 copy parameswary_t

DSC_0202 1779950_500749356713487_1400308240_n 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> Untitled-2 Untitled-1 copy
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



  • சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிரிப்பு நீடிக்கும்
    இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன
  • காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி
    தரையில் கால் பதிக்கும்போது நாம் செலவுசெய்யும் உடல் சக்தியை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கொளி வழங்கும் அறிவியல் முன்முயற்சி ஒன்று பிரேசிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி
    தரையில் கால் பதிக்கும்போது நாம் செலவுசெய்யும் உடல் சக்தியை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கொளி வழங்கும் அறிவியல் முன்முயற்சி ஒன்று பிரேசிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தூக்கத்திலும் மனிதமூளை விழிப்புடன் செயற்படுகிறது
    மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்றும், வார்த்தைகளை கேட்டு பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை விழிப்புடன் செயல்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
  • சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை
    நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்
  • மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்
    மலேசியாவில் முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இளவயதினர் கருத்தரிப்பதும், பெற்ற பிள்ளைகளை அவர்கள் தத்து கொடுப்பது என்பதும் சற்று அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கருத்தடை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் முயன்று வருகின்றன.
  • வால் நட்சத்திரத்தில் கலன் இறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டது
    ஆளில்லா விண்கலமான ரொசெட்டாவிலிருந்து கலன் ஒன்று , தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றின் மீது இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • நீந்தும் திறன் படைத்த டைனோசர் வகையின் தோற்றம்
    சஹாரா பாலைவனத்தில் புதையுண்டிருந்த ஒன்பதரை கோடி ஆண்டுகள் பழமையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன. அவ்விலங்கின் தோற்றத்தைக் காட்டும் வீடியோ
  • செய்திகள்... வாசிப்பது வௌவால்!
    அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சி செய்திக் கலையரங்கத்தில் திடீரென வௌவால் பறக்க செய்தி வாசிப்பாளர்கள் திகைத்துச் சிரித்தனர்
  • நீந்தும் டைனோசர் வகை கண்டுபிடிப்பு - காணொளி
    டைனோசர் விலங்கினத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மாமிச பட்சினி வகையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன.