மேற்படி இணையம்  இம் முப்பெரும் கிராமங்களினதும் அதன் சார் சிற்றூர்களின் வளர்ச்சி கருதி ஊர் உறவுகளாலும்,  உலகெல்லாம் பரந்து வாழும்  எமது ஊர் புலம் பெயர் உறவுகளாலும்  ஒரு உறவுபாலமாக இணைந்து இயக்கப்படும் . 

கடந்த கால நாட்டின் அசாதரண சூழ்நிலைகளினால் முனைந்து முன்னெடுக்க முடியாமல் போன முக்கியமான சில வேலைத்திட்டங்களினை உடனடி செயல்திட்டமாக கருதி, அதாவது சிதைந்துகொண்டிருக்கும், அல்லது சிதைய விட்டிருக்கப்பட்டிருக்கும்  ஊர்மக்களின் இதயத்துடிப்பாம் அம்பாள் சனசமூகநிலையத்தினை புனரமைத்து சுதந்திர நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நிலைக்கு கொண்டு வருவதே இணையத்தின் இன்றியமையாத முதற்குறிக்கோள் ஒன்று.சனசமூகநிலையதினது சரித்திரம், மேன்மை, தனித்துவம், தார்பரியம் போன்றவை நாம் இதில் குறிப்பிட்டு ஊர் மக்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியமில்லை அவ்வளவு ஆழத்தில் ஊர்மக்களின் மனதில் ஊன்றிப்போன, உணர்வுபூர்வமான ஊரின் சின்னம். 

இது உடனடியாக செயற்படுத்தாவிட்டால், வாசகசாலையினையும் எதிர் காலத்தில் ஒரு கூட்டம் வீதியில் நின்று வேடிக்கை பார்க்கும் அளவிற்க்கு
ஒரு கூட்டத்தினை உருவாக்கிய சரித்திரப்பழி எம்மீது விழ்ந்து விடும். இது மறைக்கவோ, மன்னிக்கவோ, மறக்கவோ முடியாத மாபெரும் அவமானகரமான இயலாமையே ஆகும். இவ் உடனடிச் செயல்திட்டத்திற்கு ஊரிலிருந்தும், புலம்பெயர் உறவுகளிடமிருந்தும் ஊக்கமும், ஆக்கமும் ஒத்துழைப்பும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.மேற்கொண்டு இணையம் அனைவரினது பங்களிப்புடனும், ஆக்கபூர்வமான விமர்சனங்களுடனும் ஒரு சுதந்திர இணையமாக இயங்கும். 

இணையத்தின் ஆரம்பகாலச்சிக்கலாக தொடங்கிய காலகட்டத்தில் நேயர்களின் ஆக்கங்கள் தணிக்கையின்றி அவரவர் சொந்தக்கருத்தாக எண்ணி அனுமதிக்கப்பட்டதால், அக்கருத்துக்கள் சில பிளவுகள் உண்டு பண்ணும் அளவிற்கு எண்ணக் கருவினை உருவாக்கிவிட்டது. இதனால்
இணையம் பற்றி ஒரு சார்பு நிலை தோன்றி தப்பப்பிராயம் நிலவத் தொடங்கியது. 

இது  இப்போது தவிர்க்கப்பட்டுவிட்டது. கருத்துச் சுதந்திரம் சுதந்திரமாக அணுகப்படும். அதில் சூட்சுமம் இல்லாதபட்சத்தில் வெளியிடப்படும். 

நன்றி 

வணக்கம்… 

இணையஅஞ்சல் முகவரி 

admin@panipulam.net 

———————————————————————————– 

10-09-2010 வெள்ளி அன்று டென்மார்க் ஸ்கேன் நகரில் ஒன்று கூடிய எமது கிராமிய மக்களால் இணையத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டு அதில் பின்வருவோர் இணைய செயற்குழுவாக தெரிவு செய்யப்பட்டனர். 

ஜேர்மனியில்
இருந்து
 
கு. குனேஸ்வரன்
க. செல்வராசா
இத்தாலியில்
இருந்து   சங்கர் சிவகுமார் 

கோணேஸ் 

தவேந்திரம் 

சுவிஸ்
இருந்து    சுரேஸ் 
டென்மார்க்கில்
இருந்து
 சிதம்பரநாதன்தேவராசா கிருபாகரன் 

நாகேந்திரம் 

நகுலேஸ்வரன் 

சிறிதரன் 

பாலகுமார் 

நந்தகுமார் 

இராமச்சந்திரன் 

இலங்கையில்
இருந்து
இணையத்தின்
செய்திக்குழு  இராமசந்திரன் நாகேந்திரம்   நந்தகுமார்.

எமது இணையத்தின் யாப்பும் அதன் ஆய்வு அறிக்கையும் விரைவில் வெளியிடப்படும்.

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்
உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்