‘டென்மார்க்’
ஆறாத்துயருடன் ஆறுமா நினைவுகள்.
எங்கள் குடும்ப குலவிளக்கே”
அவனியில் ஆறுமாசம் அகன்றுவிட்டது ஐயா ஆறாத்துயரில் எம்மை விட்டு போய்” எங்கள் குலதெய்வமோ அடுத்த ஆண்டு தேர் உலாவிற்கு குதுகலமாய் ஆயித்தம் ஆகின்றாளா Read the rest of this entry »
கடந்த சனிக்கிழமை டென்மார்க் ஸ்கேன் நகரத்தில் ஒரு விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடம் ஒன்றில் எமது இணையத்தின் 2வது அகவை நிறைவு விழா இணைய நிர்வாகிகள் மற்றும் அவர்கள்தம் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கொண்டாடப்பட்டது. அதன் ஒளிப்படங்கள் உங்கள் பார்வைக்கு. இந் நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணங்களால் தேவராசா, இரத்தினராசா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. எமது இணையத்தோடு இணைந்து இருக்கும் அனைத்து எமது உறவுகளுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் இத்தருணத்தில் எமது நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.
>>>> எம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.<<<<
உலகம் முழுவதும் வாழும் தமிழருக்கு இது தலை நிமிர்வு….. . . . . . . டென்மார்க்கில் வாழும் 11.000 தமிழர்களும் பெருமைப்படக்கூடிய செய்தி இன்றைய kristeligt-dagblad.dk(கிறிஸ்லி டவ்பிலத) பத்திரிகையில் வெளியாகியுள்ளது. டென்மார்க்கில் வாழும் சிறுபான்மை இனங்களில் முத்திரை பதித்த வெற்றி வாழ்வு வாழும் இனமாக ஈழத் தமிழர்கள் தேர்வாகியுள்ளனர்.
எத்தனையோ இனங்கள் எல்லாம் டென்மார்க்கில் வாழ்ந்தும் சுமார் 25 வருடங்களில் அனைவரையும் வென்று இவர்கள் டேனிஸ்காரருக்கு இணையான இனமாக முன்னேறியது எப்படி ?