‘அரங்க நிகழ்வுகள்’
லைம் லைட் பிக்சர்ஸ்” தயாரிப்பில் நிஜார் இயக்கும் படம் “கலர்ஸ்”. இயக்குனர் நிஜார், நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ளார். Read the rest of this entry »
கலைகள் வாழ்வியலின் அன்றாட விடயங்களை வெளிப்படுத்தி நின்றதால், காலத்தின் கண்ணாடியாக அவை விளங்கின. சாதாரண மக்களின் இன்ப துன்பங்களையும், தலைவன் தலைவிக்கு இடையிலான ஒழுக்கங்களையும், காதலையும், வீரத்தையும் காட்டுவனவாகவே தமிழ்க்கலைகள் எழுந்தன. செளிப்போடு வளர்ந்தன. றப்பாக வாழ்ந்தன. அவற்றின்மூலம் அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் நிலைபற்றியும், வாழ்க்கை முறைபற்றியும் இன்றுவரை நாம் அறியக்கூடியதாகவிருக்கின்றது. பரதநாட்டியம் தமிழ் நாட்டியமே. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னரே செந்தமிழ் மக்களிடையே சீரோடு வளர்ந்த கலை, சிறப்போடு இருந்த கலை, வளமோடு அமைந்த கலை, வனப்போடு மிளிர்ந்த கலை நமது தமிழ் நடனக்கலை Read the rest of this entry »
செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன்
உலகில் வாழ்கின்ற உயிரினங்களில் அனைத்தும் இயற்கையின் அசைவுகளுடனும் , இயற்கையின் சத்தத்துடனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவது கண்கூடு.பகுத்தறிவு கொண்ட உயிரினங்களாகிய மனிதன் இவ்வியற்கை அசைவுகளை கலைவடிவமாக்கி பலவகை பட்ட கலைகளை உருவாக்கி மனிதன் மனிதப் பண்புடன் வாழ் வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டி வருகின்றான் .இவ்வரிய கலைகளில் குறிப்பிடத் தக்கவற்றை பாரதநாட்டியம் மூலம் தம் சிறு பருவம் முதல் பயின்று சிறந்த அரங்க நிகழ்வாக சமர்ப்பித்த செல்விகள் றொசானா ராதாகிருஷ்ணன், அபிஷா ராதாகிருஷ்ணன் இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். Read the rest of this entry »
கலைக் கோயில் பரதநாட்டிய கலைக் கல்லூரி ஆசிரியை “நாட்டிய நர்தகி” ஸ்ரீமதி. வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகளான றொசானா – ராதாகிருஸ்ணன், அபிஷா – ராதாகிருஸ்ணன் ஆகியோரின் பரதநாட்டிய
“சலங்கை பூஜை”
எதிர் வரும் 15.10.2011 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு
1785-Finch Avenue West ல் அமைந்துள்ள
Yorkwoods Public Library Theatre ல்
நடைபெற இறையருள் கூடியுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். இவ் விழாவின் பிரதம விருந்தினர்களாக பேரறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும், பிரபல சட்ட வல்லுனரும், கலையில் சாகித்திய மண்டல பரிசு பெற்றவருமான சோமசுந்தரம் தேவராசா அவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். இவ் விழாவிற்கான அழைப்பிதழ் எல்லோருக்கும் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப் பெறும்இவ் விழாவில் அனைவரையும் பங்குபற்றி மாணவிகளை ஆசீர்வதித்து சிறப்பிக்குமாறு இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம். திரு, திருமதி. ராதாகிருஷ்ணன்
905-472-7479
கடந்த 20.12.2010 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கைலாசபதி நினைவரங்கு மாலை 3.30க்கு யாழ்ப்பாணம் புதிய உயர்கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் தலைமைதாங்கிய அழ பகீரதன் ஆற்றிய உரை :. தேசிய கலை இலக்கியப் பேரவையின் முப்பத்தேழாவது ஆண்டு நிறைவினையும் பேராசிரியர் கைலாசபதியின் இருபத்தெட்டாவது ஆண்டுநினைவினையும் நினைவுகூரும் வித்த்தில் நாம் கூடியுள்ளோம். Read the rest of this entry »
கனடா பண்கலை கலாச்சார கழகம் 16-10-2010 சனிக்கிழமை அன்று நடாத்திய
வாணிவிழாவின் விடியோ காணொளி