‘காலையடி அ.மி.த.க. பாடசாலை’

யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ மெய்வல்லுனர் போட்டி 2016 நிகழ்வு எதிர்வரும் 17.02.2016 புதன் கிழமை பி.ப. 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு அ. ஸரீபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மரணம் சிலபேரை மறையச் செய்யும், மரணத்தால் அழிக்கப்படாத சிலர் இம் மண்ணில் யுகங்கள் பல கடந்தும் காலத்துள் வாழ்கின்றனர்.
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
அந்தவகையில் தமது தந்தையாரின் நினைவைச் சிறப்பிக்கும் விதமாக இவ் அளப்பரும் நன்கொடையை மனமுவந்து வழங்கிய பிள்ளைகளுக்கும், அவரின் மனைவியாருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பிலும், பழைய மாணவர்கள் சார்பிலும், எமது கிராமத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Info- Saba Thanu
அண்மையில் எமது ஊரில் அமைந்திருக்கும் காலையடி அ.மி.த.க. பாடசாலை அதிபரை எமது இணையம் சார்பாக திரு.நகுலேஸ்வரன் சந்தித்து உரையாடி இருந்தார். அந்த சந்திப்பில் பாடசாலை அதிபர் பாடசாலையின் இன்றைய நிலமைபற்றி பல விடங்களை எமது இணையம் ஊடாக இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் தனது கடிதம் வடிவில் எழுதி தந்திருந்தார். அந்த கடிதமும் மற்றும் பாடசாலையின் சூழலும் அதன் ஒரு நாள் அன்றாட நிகழ்வுகளையும் ஒளிப்பதிவு செய்து உங்கள் பார்வைக்கு தருகின்றோம். Read the rest of this entry »