உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘வாரமொரு பெரியவர்’

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், சிறுவயதிலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டிருந்தார். கவிஞராக அறியப்பட்டு, தமிழாசிரியராய் பணி செய்து பின்னர் பத்திரிகையாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்த்திருத்தவாதி, சாதி மறுப்பாளர், பெண்ணுரிமைப் போராளி என பன்முகங்கள் கொண்டவராகப் பாரதியார் விளங்குகின்றார். Read the rest of this entry »

திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்.? ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்? எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை. ‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வலப்புறாமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினார்கள்; Read the rest of this entry »

Read the rest of this entry »

“Creation” என்று டார்வினைப் பற்றி ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்தப் படம் பார்த்த சில நாட்களுக்கு டார்வினைப் பற்றி நிறைய தேடி வாசித்தேன். எவ்வளவு பெரிய ஆளுமை. எவ்வளவு சுற்றியலைந்து பயணம் செய்து வாழ்வனுபவங்களைச் சேகரித்திருக்கிறார். ஆழ்ந்து ஆய்வு செய்திருக்கிறார். அவரது இயற்கை வரலாற்றுப் புத்தகம் விஞ்ஞானத்தின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையின் முதல் சாதனை என்றே தோன்றுகிறது. மொத்த மனித வாழ்வையே டார்வினுக்கு முன்பு டார்வினுக்கு பின்பு என்று பிரிக்குமளவு அவர் ஒரு முக்கிய புள்ளியாக உருக்கொண்டிருந்திருக்கிறார். Read the rest of this entry »

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி சுப்பையா என்று அழைக்கப்பட்டார் தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். Read the rest of this entry »

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாத பிள்ளை – பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார்.

தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார். Read the rest of this entry »

சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்கு பிறந்தார்.இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர்,அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியத்தைக் கற்றார். Read the rest of this entry »

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார். Read the rest of this entry »

நெடுந்தீவைச் சேர்ந்த நாகநாதன் கணபதிப்பிள்ளை கென்றி ஸ்ரெனிஸ் லெஸ், கரம்பொன் சிசில் இராசம்மா தம்பதிகளுக்கு 02.08.1913 இல் அடிகளார் பிறந்தார். சேவியர் என்ற திருமுழுக்கு பெயர் கொண்ட இவர் யாழ்ப்பானத்திலுள்ள புனித அந்தோனியார் ஆங்கிலப்பாடசாலை, புனித சம்பத்திரீசியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் Read the rest of this entry »

பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் தமிழை தமது மூச்சாக கொண்டு வாழ்ந்த அறிஞர்கள் பலர். இவர்கள் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கியவர்கள். இவர்களால் தமிழ்மொழி செழுமை பெற்று வளர்ந்ததென்றே கூறலாம். சில பாடல்களை கேட்கும்போது நாமும் பாடவேண்டும் என்ற ஊக்கத்தை தர வல்லன. இவ்வாறான பாடல்களை தந்தவர்களுள் தங்கத்தாத்தாவும் ஒருவர்.இவர் ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவாலி என்னும் ஊரில் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி வன்னிய சேகர முதலியார் வழித்தோன்றலாய் வாழ்ந்த கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை என்போருக்கு திருமகனாய் பிறந்தார். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து