‘விரதங்கள்’
என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. Read the rest of this entry »
மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 17.02.20 15 செவ்வய் கிழமை அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.
மகா சிவராத்திரியின் சிறப்பு
மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளையே நாம் மகா சிவராத்திரியாக சிறப்பிக்கின்றோம். சிவராத்திரி என்பது இருவகைப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. அதுவே மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரி என்று சிறப்பிக்கப்படுகிறது. Read the rest of this entry »
தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. Read the rest of this entry »
கேதார கெளரி விரதம் முழுக்க முழுக்க மாங்கல்ய பலத்தை அளிக்கக் கூடியது. ஐப்பசி அமாவாசையன்று வரக்கூடிய கேதார கெளரி விரதம் மிக முக்கியமானது. சிவனை நினைத்து வழிபட்டு எல்லா பலத்தையும் பெறுவது. சக்தி வெற்றி பெற்ற நாள் அது. இதனை சுமங்கலிகள் கடைபிடிக்கும்போது அவர்களுடைய மாங்கல்ய பாக்கியம் தீர்க்க சுமங்கலியாகும். கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும்போது அவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். எனவே கேதார கெளரி விரதம் என்பது விரதங்கள் அனைத்திலும் மிக விசேடமானது. கெளரி என்றால் அம்பாள். சிவனை நினைத்து விரதம் இருந்து, தியானித்து எல்லா பலத்தையும் பெற்ற நாள். தான் பெற்றதைப் போல் பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்று அம்பாள் அருளும் நாள் அது. Read the rest of this entry »