யாழ். பண்டத்தரிப்பு செட்டி குறிச்சியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hildesheim ஐ வதிவிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரன் கமலேஸ்வரன் அவர்கள் 09-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சர்வேஸ்வரன் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், நித்தியா, விநோதியா, தெய்வீகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துரைராஜேஸ்வரன்(துரை), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பகீதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,அமுதலிங்கம், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், வேல்முருகன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சேதுகாவலன் அவர்களின் அன்புப் பெறாமகனும், ராணி சிவநேசன்(லண்டன்), பேபி கந்தசாமி(கனடா), அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ரஞ்சி, ராஜி, ராசாத்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,மணி, உதயகுமாரன் இன்பராணி, மோகனகுமாரன் சோதிகலா, காலஞ்சென்ற நந்தகுமாரன், பாலகுமாரி கணேசலிங்கம், கிருஷ்ணகுமாரி தேவகுமாரன், கமலகுமாரி சந்திர ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெனலியா, சாதூரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.