‘ஜேர்மனி’
ஜேர்மனி பீலபெல்டில் 28.06.2015 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட கோடைகால ஒன்றுகூடல் நெதர்லாந்து மண்ணில் பிரபல ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருப்பதால் , அன்றைய தினம் எம் ஒன்றியத்தின் ஒன்றுகூடலானது நடைபெற மாட்டாது என்பதையும் 06.09.2015 அன்று ஒன்றுகூடலை நடத்த ஏகமனதாக 08.06.2015 அன்று நடைபெற்ற நிர்வாகசபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புகைப்படங்கள்
இணைய உறவுகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்;
April 7, 2015 at 14:16 அன்று நோர்வயில் உள்ள திரு சி,சிவானந்தம் அவர்கள் எழதிய கட்டுரைக்கு மதிப்புக்குரிய ஜேர்மனியில் வசிக்கும் திரு அருளானந்தம் என்பவரின் பெயரைப் பயன் படுத்தி கருத்து எழுதிய அன்பருக்கு ஒரு வேண்டுகோள்? நீங்கள் எழுதிய கருத்து தவறு என்று கூறவரவில்லை ஒருவரின்பெயரை பயன்படுத்தியது தவறு. இக்கருத்து எங்கிருந்து வந்தது என்று எங்களுக்கு தெரியும்,நாங்கள் சும்ம இருந்துகொண்டு இணையம் நடத்தவில்லை, எங்களுக்கும் வேலைவெட்டி உண்டு . நீங்கள் கருத்துக்கள் எழுதும் பொழுதுஅடுத்தவர் மனதை புன்படுத்தாதவாறு எழுதும்படி கேட்டுக்கோள்கிறோம்,
இப்படிக்கு
இணைய நிர்வாகம்
சி.அருளானந்தம்
ஜேர்மனி 12.04.2015
பணிப்புலம், காலையடி, சாந்தை, கலட்டி இணைய பொறுப்பாளர்கட்க்கு!
சித்திரை- 5- 2015 என திகதியிடப்பட்டு தங்கள் இணையத்தில் சிவானந்தம் என்பவரால் எழுதப்பட்டு இருந்த ஓர் ஏக்கம் என்ற தலைப்பில் உள்ள விடையத்திற்கு எனது பெயரில் யாரோ இனம் தெரியாதவர் தங்கள் கருத்தை எழுதி ஆலய பூசகர்கள் சம்பந்தமான எனக்கு எதுவும் தெரியாத ஒரு விடயத்தை எனது பெயரில் எழுதி உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதனை மற்றவர் வாயிலாக அறிந்து இவ் விடையத்தை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததோடு தயவு செய்து எனக்கு தொடர்பு இல்லாத இவ் விடயத்தை எழுதியவரை கண்டு கொள்வதோடு மீண்டும் இப்படியான அனாமனோதய விடையங்களில் மிகவும் அவதானமாக நடந்து உங்கள் இணையத்தின் நம்பிக்கையை பாதுகாத்துக்கொள்ளும் படி த்ங்களை மிகவும் தயவாக வேண்டுகின்றேன்.
உண்மையுள்ள
சி. அருளானந்தம்
(எமது இணைத்துக்கு வந்த கருத்து)
arulantham:
April 7, 2015 at 14:16
வணக்கம் :
ஏன் என்ன அம்மன்கோவிலருக்கு பொன்னம்மாவிண்ட ( அம்மன் கோவில் முன் வளவு) வேண்டிய காசு கொடுக்க காசு காணாத ?அதற்கு இப்படி ஒரு கணிப்பிடு ?எதோ இதுவரைக்கும் எங்கட ஊரில சனம் சாகாத மாதிரியும் இவர்களின் கதை இருக்கிறது !!!இல்லை இந்த கருத்தை முதலில இந்த இணைய தலத்தில போடா விட்ட ஆளை ஒருக்கா சொல்லவும் ?
நன்றி
வணக்கம்
எமது ஊரில் வாழும் பணிப்புலம் வாழ் பெரியோர்களுக்கு, யேர்மன் பீலவீல்வாழ் ஊர் நலன்விரும்பியின் ஓர் அன்பான வேண்டுகோள், ஊரில் நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை வளரவிடாமல் பெரியோர்களாகிய நீங்கள் தலையிட்டு முடிந்தளவுக்குத் தீர்த்து வைக்கவும்.கடந்தகாலங்கள் போல சண்டை சச்சரவுகள், வெட்டுப்பகைகள் வேண்டாம்.நாங்கள் கடந்த ஒருதசாப்தகாலமாக நீதிமன்றங்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் கொடுத்தது கொஞ்நஞ்சமல்ல. யார் கொடுத்தாலும் அது எங்களூர் உழைப்பு. கஸ்ரப்பட்டு உழைத்து தேவையில்லாமல் ஏன் ……. ?இது இருபத்தோராம் நூற்றாண்டு. சண்டை வேண்டாம்.எல்லோரும் சமாதானமாக சந்தோசமாக இருப்போம்.பிளவு வேண்டாம். பிரிந்து இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம். சதிசெய்வோரின் சதிவலைகளில் அகப்படாமல் சந்தோசமாக இருப்போம்.எட்டப்பர்கள் எல்லாக்காலங்களிலும் உருவெடுப்பர். அவர்களை அடையாளம் கண்டு ஓடோட விரட்டுவோம்.கடந்த முற்பது ஆண்டுகளாக எங்கே போனது இந்தச் சண்டித்தனம்?. அதுபோல ஏன் இன்னமும் வாழமுடியாதா? சிந்திப்போம்.செயலாற்றுவோம்.அடுத்தவர் அவமானப்படும் {மனம் புண்படும் }வகையில் எதையும் எழுதுவதோ, பேசுவதோ நல்ல பண்பல்ல.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்{கு} அணி.ஒருபக்கம்மாக இல்லாமல் நடுவு நிலமையில் இருப்பதே அறிவுள்ளோர்க்கு அழகாகும்.பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.பிறர் குற்றம் பேசிப் பழிப்பவன் பிறராலும் குற்றங் கூறிப் பழிக்கப்படுவான் அன்பே சிவம் ஒற்றுமையே வலிமை,மன்னிப்பதே மனிதப் பண்பு,எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசித்தீர்ப்பதே சிறந்த வழி.இது எங்கள் ஊர் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும் என்ற ஆதங்கமே.
அன்புடன் பணிப்புலத்தான்.