‘எம்மவர் ஆக்கங்கள்’
பாவம் செய்த மக்கள்
——————————–
ஒரு ஊரில் ஒரு குளம் .அந்த ஊருக்கு அது ஒரு முக்கியமான குளம் .அவ் ஊரிலுள்ள அனைவரும் அக் குளத்து நீரையே விரும்பிக் குடிப்பர் .மிகப் பழமையான குளம் என்பதால் அவ் ஊர் மக்கள் அனைவரும் அக்குளமே தமது வாழ்க்கைக்கு காரணமெனப் பெருமையுடன் கூறி வருகின்றனர் .இக்குளம் காலத்துக்கு காலம் அதை பயன்படுத்துவோரால் செப்பனிடப்பட்டு வந்தது .ஆரம்பத்தில் மிகச் சிறுகுளமாக இருந்து பின் வளர்ச்ச்சி அடைந்து இப்போ அவ் ஊரில் ஒரு பெரிய குளமாக அவ்வூரில் காணப் படுகிறது .அவ்வூரில் வேற…ு பல சிறிய குளங்கள் இருந்த போதும் மக்கள் இக் குளத்திலேயே அதிகம் நாட்டம் கொண்டு வருவது அந்தக் குளத்தின் தனிச் சிறப்பே .
அக்குளத்தில் ஆடிப்பூர நட்ஷத்திரத்தின் முந்திய பதினைந்து நாட்கள் விசேட நீர் ஊற்றுக்கள் காணப் படுவது அக்குளத்தின் விசேட சிறப்பாகும் .இக்காலங்களில் அவ்வூரிலிருந்து பிற இடங்களில் ,வெளிநாடுகளில் சென்று வாழ்வோர் கூட அங்கு வந்து அந்த நீரைப் பருகத் தவறுவதில்லை .அக்குளத்துடன் சம்மந்தமான நான்கு பிரிவுகள் உண்டு .குளம் ,குளத்துநீர் ,அதை பயன்படுத்தும் மக்கள் ,குளத்துக்கு உரிமை கோரும் ஒரு பிரிவினர் . Read the rest of this entry »
அன்று,கனடிய மண்ணின் முதன்முதலில் கால் பதித்த காலமது.டொரோண்டோ நகர வீதியின் பல இடங்களில் வழக்கறிஞர்களின் ”need quick divorce ,call 416-0000000 ‘ என்ற விளம்பர ங்களை வாசித்து வியந்திருக்கிறேன். [தங்கள் வருமானத்திற்காக] ”அடுத்தவனை விட நான் கெதியாக உங்களை பிரித்து வைப்பதில் கெட்டிக்காரன்” என்று அவ்விளம்பரம் என் காதுக்குள் குசுகுசுக்க எனையறியாமல் எனக்குள் நான் சிரித்திருக்கிறேன். இத்தனை தூரம் திருமண வாழ்க்கை என்பது காசு வைத்து ஆடும் ஒரு ஆடு,மாடு மந்தைகளின் தொழில் போன்று மேற்கு நாடுகளில் மலிந்துவிட்ட்து என எண்ணினேன்.
பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்
பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம் வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான். Read the rest of this entry »