உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘மண்ணின் மைந்தர்கள்’

அமரர் சபாபதி சண்முகலிங்கம் (சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலைமுன்னள் அதிபர் )

மண்ணின்  மைந்தர்கள் வரிசையில் இன்று வருபவர் அமரர் சபாபதி சண்முக லிங்கம் அவர்கள் .பணிப்புலம் கிராமத்தில் பிறந்த இவர் ஆசிரியராக அதிபராக கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி மறைந்தவர் .அமரர் அவர்கள் எமது கிராமத்தில் (சமூகத்தில் )மிகப் பழமையான ஒரு கலைப்  பட்டதாரியாக ஆசிரியர் சேவையில் (1967 என நினைக்கிறேன் )சேர்ந்தார் .

Read the rest of this entry »

FullSizeRender (1)மண்ணின் மைந்தர்கள் வரிசையில் அடுத்த மைந்தனாக வருபவர் அமரர் வித்துவான் மு .விருத்தாசலம் அவர்கள் .

————————————–

எனது நினைவில் யாருடைய வாழ்க்கை வரலாறுகளையும் கூறும் நோக்கம் இல்லை என்பதை முதற்கண் அறியத்தருகின்றேன் .மண்ணின் மைந்தர்களாக அவர்களின் சேவைகள் குணாதிசயங்கள் பற்றிக் கூறுவதே எனது நோக்கமாகும் .எனவே நான் இங்கு கூறும் விடயங்களில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் தயவு செய்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .அமரர் விருத்தாசலம் அவர்கள் நான் பிறந்த சாந்தையில் எனக்கு முன் பிறந்த பெரியாராவார் .அமரர் முருகேசுவுக்கும் விசாலாட்சிக்கும் கனிஸ்ட மகனாகப் பிறந்தவர் .சைவ சமய நெறியை முறையாகக் கடைப்பிடித்த குடும்பத்தில் பிறந்தவராதலால் சைவ சமய நெறியில் அதிக ஈடுபாடு உடையவராகக் காணப்பட்டார் .நானறிந்த விருத்தாசலம் அவர்கள் ஒரு ஆசிரியர் என்பதாகும் .எனக்கு நெருங்கிய உறவினராக இருந்த போதும் நான் அவரை ஒரு ஆசிரியராகவே கணித்து வந்துள்ளேன்இவர் சாந்தையில் பிறந்து பின் பனிப்புலத்தில் வாழ்க்கைப் பட்டு வாழ்ந்தவர் .தமது கூடிய ஆசிரிய சேவைக் காலத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கழித்ததாக அறிகிறேன் . Read the rest of this entry »

மண்ணின் மைந்தர்கள் வரிசையில் இன்று

 சாந்தை சிற்றம்பல வித்தியாசாலையின் தந்தை ,அமரர் அம்பலவாணர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் . 

இன்று சாந்தையில் ஒரு பாடசாலை இருப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அமரர் சிதம்பரப்பிள்ளை செட்டியார் அவர்களே .இந்து சமயத்தை வளர்க்க முன்னின்று உழைத்த ஒரு ஆன்மீகவாதி அமரர் அவர்கள் .இந்து சமயத்தை நலிவுறாது காப்பதற்கு இந்துப் பாடசாலைகள் அவசியம் என்பதை அன்று உணர்ந்த செட்டியார் அவர்கள் சனத்தொகை கூடிய பாடசாலை வசதியில்லாத ஒரு இடத்துக்கு இந்து பாடசாலை இருக்கவேண்டிய தேவையை உணர்ந்தார் ,

இளமையில் சிங்கப்பூரில் தொழில் புரிந்து ஓய்வில் நாடு திரும்பி இருந்தவர் தமக்குச் சந்ததி இல்லாத குறையைப் போக்க ஊர்ப் பிள்ளைகளை ஊட்டி வளர்க்க எண்ணம் கொண்டார் .ஓய்வு பெற்று ஊரில் இருந்த காலத்தில் இடையிடையே சாந்தை விநாயகர் ஆலையத்தில் பூசகராகவும் இருந்தார் .தமது சேவை உருக்கு உதவ வேண்டும் என்னும் பேரவா அவர் சமய ரீதியில் நற்ப்பணி ஆற்றினார் .இக்காலத்தில் சைவ பரிபாலன சபையினர் கிராமந்தோறும் பாடசாலைகள் அமைக்கும் முயற்ச்சியில் இருந்தனர் . அப்போது செட்டியார் அவர்கள் தமது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்து சாந்தையில் உள்ள தமது காணியான 10 பரப்பளவு காணியை சைவ பரிபாலன சபையிடம் அன்பளிப்பாகக் கையளித்தார் .1957ஆம் ஆண்டு இந்து பரிபாலன சபையினர் அக்காணியில் ஒரு மண்டபம் அமைத்து 1959 ஆம் ஆண்டு பாட சாலை ஆரம்பிக்கப் பட்டது .ஆரம்பத்தில் இப்பகுதிப் பிள்ளைகள் அக்கறை குறைவாக இருந்த போதும் இப்போது மூன்று மண்டபங்கள் அமைக்கப் பட்டு நிறைந்த பிள்ளைகள் கற்கக் கூடியதாக வளர்ந்துள்ளது .அமரர் அவர்களின் எண்ணம் நிறைவேறியது .இருந்தும் இப் பாட சாலையில் குடிநீர் இல்லாத குறை இருந்தது .இதைப் போக்க 1980 ஆம் ஆண்டு பாடசாலைவளவில்ஒருகிணறும் அமைத்துக் கொடுத்தார் .இதன்பின் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் இல்லாத குறை காணப்பட்டது .இதைப் போக்க பாடசாலைக்குச் சற்று தொலைவில் உள்ள தமது வயல்க்கரைக் காணி12 பரப்பையும் விளையாட்டு மைதானத்துக்காக வழங்கினார் .இன்று இது பாடசாலை மாணவர்களுக்கு ஒரு சிறந்த மைதானமாக விளங்குகிறது .

ஒரு அடி நிலத்துக்காக ஒன்பது பத்து வருடங்கள் கோடேறி வழக்காடும் எம்மவர்கள் மத்தியில் இத்தகைய சேவை செய்த ஒரு மகான் அமரர் அம்பலவாணர் சிதம்பரப்பிள்ளை நினைவு கூராது இருப்போமானால் நாம் செய் நன்றி மறந்தவர்களாவோம்.

 

நன்றி 

ஆ .த .குணத்திலகம்     ஓய்வு பெற்ற ஆசிரியர் , சாந்தை

யாழ்ப்பாணத்து பேச்சுவழக்கில் பிரபலமான, ஆனால் தற்போது அருகிவரும் ஒரு சொல், “துலைக்கோ போறியள்”. ஒருவர் புறப்படும்போது அல்லது எங்கேயாவது சென்றுகொண்டிருக்கும்போது “எங்கே போறீங்க?” என்று கேட்பது அபசகுனம் என்பதற்காக, அச்சொல்லுக்கு பதிலாக உபயோகிக்கப்படும் மங்களச் சொல்லே “துலைக்கோ போறியள்”.
கிட்டத்தட்ட இன்றைய சந்ததியினரிடத்தில் அருகிப்போய்விட்ட இந்த சொல்லை தலைப்பாக கொண்டு மதி.சுதாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது “துலைக்கோ போறியள்” குறும்படம்.

யாழ்ப்பாணத்து மக்களின் முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றையும் நகைச்சுவையூடே எடுத்துச்சொல்லியிருக்கிறார் ம.தி.சுதா.

மரங்களின் தந்தை அமரர் சண்முகவடிவேல் ,”

சாந்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் அமரர் முருகேசு சண்முகவடிவேல் அவர்கள் .இவரைப்பற்றி இவரது வாழ்க்கை வரலாறு பற்றி நான் இங்கு எவற்றையும் கூற வரவில்லை .ஆனால் வாழ்நாளில் ஒருவர் செய்த நல்ல செயலைக் கூறியே ஆகவேண்டும் .எனவே எனது கருத்தில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதை மணிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் . “மரங்களை வளர்ப்போம் “என்னும் கொள்கைக் கமைவாக எமது ஊரிலுள்ள பல ஆலையங்களில் மரம் நாட்டும் தொண்டைச் செய்து வந்தவர் அமரர் அவர்கள் .எம் ஊர் ஆலையங்களில் ஆலமரம் -அரசமரம் -வேப்பமரம் -மருதமரம் போன்றவற்றை நாட்டி உண்டாக்கியவர் அமரர் வடிவேலு அவர்களே .பறாளாய் முருகன் பிள்ளையார் வயல்க்கரை சிவன் சாந்தை விநாயகன் பனிப்புலம் அம்பாள் ஆகிய ஆலையங்களில் இன்று காணப்படும் மரங்களில் அமரரின் மரங்களும் அடங்குகின்றன .
சாந்தைப் பிள்ளையார் கோயிலடி என்று அழைத்த இடம் பிற்காலத்தில் “வேம்படி “என அழைக்கப்படக் காரணம் ஆக இருந்தவர் அமரர் அவர்களே .அவர் நாட்டிய முதலாவது மரம் சாந்தை விநாயகர் ஆலைய வாயிலில் நின்ற பாரிய வேப்பமரமே .அந்த வேப்பமரமே அந்த இடத்தை “வேம்படி “என அழைக்க வைத்தது .இந்த வேம்பு சுமார் 60வருடன்கலுக்குமுற்பட்டதாகும் .எம் ஊர் (சாந்தை )இளைஞர்கள் பலரின் வரலாறுகளை இவ் வேப்பமரம் அறியும் .கால அழிவின் போது இந்த வேப்பமரமும் அழிவுற்றது .வேம்படி என்றபெயரும் மறைந்தது .ஆனால் ஏனைய மரங்கள் இன்றும் கம்பீரமாக உள்ளது .இன்று மாற அழிப்புகள் தீவிரமாக உள்ளதால் இன்னும் அழிவுகள் வரச் சாத்தியமுள்ளது .
இருப்பினும் இப்போதுள்ள பெயரை நினைவு கூறும் வண்ணம் உள்ளது .வேப்பமரம் அழிந்து வேம்படி என்ற பெயரும் அழிந்து வேம்படியில் வாழ்ந்த மக்களும் இடம் பெயர்ந்து இன்று அநாதரவாக்கப் பல வீடுகள் காட்சி யளிப்பது கவலைக்குரியது .மரங்கள் மட்டும் மறைந்த வரின் பெயரை நினைவூட்டுகிறது .
                                                          நன்றி . நக்கீரன்
                                                           பணிப்புலம்

shivasamboo01 Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து