உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘நினைவஞ்சலி’

//people.panipulam.net/#!album-739சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலை,அதிபரின் இறுதி சடங்கிற்காகஅம்பாள் சனசமூக இளைஞர்களும்காலையடிதெற்குமறுமலர்ச்சிமன்றமும் (இரவுபாடசாலை மாணவர்கள்,) பணமக்கள் இலவசகல்விகூடமாணவர்களும் , (வெற்றிமடம் )மறுமலர்ச்சி மன்ற இளைஞர்களும், சாந்தைஇளைஞர்களும் ஆறுமுகவித்தியாலய மாணவர்களும் இணைந்து வீதி துப்பரவில் ஈடுபட்டபோது.

அன்பெனும் சொல்லுக்குப் பொருளாய் அமைந்ந்திருந்தீர்
ஆனந்தம் பெருக எம்மை பேணி வளர்த்திட்டீர்
இல்லாமை என்பதை இல்லாது போக்கடிதத்திர்
ஈன்ற எம்மன்னையை பாசமுடன் நேசித்திர்

உண்மைதான் உயர்வெனும் நீதியை உறுத்தி நின்றீர்
ஊக்கமே வாழ்க்கையின் ஆக்கமென புகன்றிர்
எண்ணையும் எழுத்தையும் எழிலுடன் கற்பித்தீர்
ஏற்றமுடன் எம்மையிப் புவியில் வாழ்வித்தீர்

ஒற்றுமை ஒன்றுதான் நற்றுணை எனவுரைத்தீர்
ஓரம் போகாதேயென அறிவுரை சொல்லி வைத்தீர்
ஒளவியம் ஆக்கத்திற் க ழிவென மொழிந்திட்டீர்
அஃதே வாழ்க்கையின் நியதியெனக் காண்பித்தீர்
எந்தையே !

இருபது ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
இருப்பது எம் நெஞ்சில் உன்முகம் ஐயா
உருவமற்ற உன்னொளி தன்னில் நாம்
திரு நிறைந்தே வாழ்ந்திட வைத்தீர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த எம்மையா
தெய்வத்தின் திருவடி சேர்ந்ததும் வீதியே
பிறப்பொன்று இருக்குமேல் இறப்பும் உண்டென
மறக்கமுடியாது இறையடி சேர்ந்தீர்

சாந்தையில் பிறந்து சாந்தையில் வாழ்ந்து
சாந்தை விநாயகன் திருவடி சேர்ந்த
மாண்புடன் எம்மிடம் வாழ்ந்திட்ட ஐயா
மீண்டும் எம்மிடம் பிறந்திட வேண்டுகின்றோம்

நினைவில் நனைந்திடும்
அன்புக்கு
குடும்பத்தினர்

 

காலம் சென்ற ஆறுமுகம் செல்வராஜாவின் இறுதிக்கிரிகைகளில் நேரடியாக பங்குபற்றியவர்களிற்கும், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களின் வீடுகளிற்கு சென்று இரங்கல் நிகழ்வுகளில் பங்கு பற்றுயவர்களுக்கும், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினர் உறவினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் , நமது ஊர் இணையத்தளங்களினூடாக அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும்

நன்றி கூறிக்கொள்கின்றோம்
 
அந்தியட்டி கிரியை அழைப்பு

 02-07-2017
ஞாயிற்றுக்கிழமை நண்பகல்

மண்டப முகவரி
Erra Palace

10 Karachi Dr.
Markham, ON L3S 0B5
 இப்படிக்கு
குடும்பத்தினர்

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து