உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

‘பணிப்புலம் சனசமூக நிலையம்’

அம்பாள் சனசமூகநிலையத்தின் கணக்கறிக்கை எமது இணையத்தில் இணைக்கும் போது தவறு ஏற்ப்பட்டுள்ளது. மிக  விரைவில் சரியான முறையில் இணைக்கப்படும்
என்பதை அறியத்தருகின்றோம்.

banner ambaal

Read the rest of this entry »

 

http://people.panipulam.net/#!album-421

2013 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட 74 சனசமூக நிலையங்களில் சிறந்த தலைமைத்துவம் முகாமைத்துவ திறன் கொண்ட சனசமூக நிலையமாக பனிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம் தெரிவு செய்யப்பட்டு 30,12,2013 அன்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் திருமதி.ந.ஐங்கரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சனசமூக நிலைய செயலாளர் திரு.ஜெ.ஜெயகாந்தன் அதற்கான விருதினை வடமாகான உள்ளுராச்சி மன்ற தலைவரிடம் இருந்து அதனை பெற்றுக்கொண்டார்

Paki-annaPaki anna back

invi 1
invi
தகவல் – விழா ஏற்பாட்டுக் குழு

இணையத்திற்கு அனுப்பி வைத்தவர்.பாலகுமார் தங்கராசா
புனர் நிர்மான வேலைகளுக்கான பல இடையூறுகளும் யாவரும் அறிந்ததே.இருந்தும் பணிப்புலத்தை நோக்கிய இந்த நிர்மான வேலையை தொடர நமது ஊரில் வசிக்கும் அனைத்து சமூகத்தொண்டர்களை நாடியிருந்தோம்.
கடந்த பங்குனி மாதம் நான் எனது தனிப்பட்டவிடயமாக இலங்கை பயணமாகியபோது நிர்மான வேலைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.வேலையும் ஆரம்பித்து தடைகள் பலதால் நிறுத்தப்பட்டன.கடந்த ஆனிமாதம் மீண்டும் எனது பயணத்தின்போது  வேலையை ஆரம்பித்து தற்ப்போது தொடர்ந்தும் பணிகள் நடைபெறுகின்றது. Read the rest of this entry »

இந்த புணர்நிர்மான வேலைக்கான மொத்தத் தொகை 30 லட்சத்தில் 20% முற்பணமாக 6 லட்சம் ருபாய் கையளிக்கபட்டது. இப்பணம் கையளிக்கபட்ட போது திரு.சி.கனகலிங்கம் பணிப்புலம் திரு.தா.பாலகுமார் டென்மார்க் இருவரும் சேர்ந்து கட்டிட கலைஞர் திரு.ரவி அவர்களிடம் கையளிக்கபட்டது.   எடுக்கப்பட்ட நிழல் படங்கள் தரப்பட்டுள்ளது.. நிதி சேகரிப்பாளர்கள் வேகமாக நிதியை சேகரித்து அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் .நிதிகள் சரியான நேரத்திற்கு வரத் தவறுமாயின் புனர்மான வேலை பின்னடைவுக்கு நிதி சேகரிப்பாளர்கள் காரணமாக வேண்டி வரலாம். த.பாலகுமார்  டென்மார்க்

http://people.panipulam.net/#159
படங்கள்.. பாலகுமார் தங்கராஜா.

Read the rest of this entry »

ஏறக்குறைய அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர்களால் எவ்வளவோ பாடுபட்டு எமது கிராமத்தை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டதே எம் ஊரில் உயர்ந்து இருக்கும் அம்பாள் சனசமூக நிலைய கிராம அபிவிருத்தி சங்க கட்டடம் ஆகும். இக் கட்டிடமானது கட்டப்பட்ட வேளையில் அதுபோன்ற ஓர் உயரிய இரண்டு மாடிகளைக் கொண்ட அழகான கட்டிடத்தை வேறு எந்த வாசிகசாலையிலோ கிராம அபிவிருத்தி சங்கங்களோ எமது மாவட்டத்தில் கொண்டிருக்க வில்லை என்பதை பார்க்கும் போது எம் ஊரின் மூதாதையர்கள் எவ்வளவு தூரம் எமது கிராமத்தை வளர்த்து இருந்தார்கள் என்பதை எல்லோராலும் உணர முடியும். Read the rest of this entry »

http://people.panipulam.net/#138

1982 ஆம் ஆண்டு பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட புகைப்படம் இது. 

பரிசு வழங்குபவர். வ.சுப்பிரமணியம்(ஆசிரியர்) அன்றைய பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தின் செயலாளர்.

அறிவிப்பாளர். சு.சுந்தரசிவம் (தற்போது வட்டாரக்கல்வி அதிகாரி)  

சிறுவர்களை ஒழுங்குபடுத்துபவர். க.மோகனராசா (தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். வாசிகசாலையின் மீள் கட்டுமானத்திற்கு சுவிஸில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.

 பரிசு பெறுபவர். பா. சிவகுமார். தற்போது யேர்மனி ஒஸ்னாபுறுக்கில் வாழ்ந்து வருகின்றார்.  பார்வையாளராக இருக்கும் சிறுவர்கள் இன்றைய குடும்பத்தினர்கள். அவர்களில் சிலர் (கண்ணன் கனடா, மகி கனடா,(பஞ்சலிங்கம் மகன்)   

இணையத்திற்கு படம் அனுப்பியவர். குணேஸ்(பிலபில்ட் யேர்மனி)
படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் கிளிக் பண்ணவும்.

Read the rest of this entry »

பழைய நிர்வாக அறிக்கைகள்,வரவு செலவு அறிக்கைகளுடன் கூட்டம் ஆரம்பமாகி புதிய நிர்வாகத்தெரிவுகளும் இடம்பெற்றன.கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துள்ளனர்.கூட்டத்தில் புதிய நிர்வாக தெரிவிற்க்கு கிராமசேவகர் வருவதாய் உறுதிகூறிய நிலையிலும் அவர் சமூகம் தரவில்லை என்றாலும் பொதுக்கூட்டம் இனிதே நடைபெற்றன.பல கருத்துமோதல்கள் இடம்பெற்றிருந்தாலும் சுமூகமான முறையில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டன.புதிய நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு. Read the rest of this entry »
திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து