உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

விவசாயத்தால் நட்டமடைந்த விவசாயி தனக்கு தானே தீ மூட்டி உயிரை மாய்ந்த சம்பவம் ஒன்று நேற்று(11) அல்வாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அல்வாய் வதிரியை சேர்ந்த 60 வயதுடைய மா. உதயதாசன் என்ற விவசாயி இவ்வாறு உயிரிழந்துள்ளாா். கடந்த வருடம் வெங்காய பயிற்செய்கை மேற்கொண்டு நட்டமடைந்துள்ளார்.இம்முறை கத்தரி பயிர் செய்து அதிலும் நட்டமடைந்துள்ளார்.இதனால் மனவிரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட இவர் நேற்று(11) மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டு  நிலையில் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

பின்னர் தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். தற்செயலாக மனைவி இவரை கண்டபோது இவர் எரிந்த நிலையில் காணப்பட்டார்.உடனடியாக மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டாா்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று(11) மாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த மரண விசாரணையை மரணவிசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் இன்று(12) மேற்கொண்டிருந்ததன் பின்னர். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து