உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஊட்டியில் அண்ணனுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் பாவண்ணன். மிகவும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர், எப்போதும் தூய தமிழில் தான் பேசி வருகிறார். இவருடைய அண்ணன், இவருக்கு பஸ் கண்டெக்டர் வேலை வாங்கித் தருகிறார்.

அங்கேயும் இவர் தமிழில் பேசி வருகிறார். இதனால் பொதுமக்கள் இவரை கேலியாக பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நாயகி அஞ்சனா ராஜ் ஊட்டி வருகிறார். ஆண்களால், பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் தெரியாத அஞ்சனா ராஜ், தமிழ் தெரிந்துக் கொள்ள பாவண்ணனுடன் பழகுகிறார். இருவரும் நட்பாக பழகினாலும், பார்ப்பவர்கள் இவர்கள் காதலர்கள் என்று நினைத்து வருகிறார்கள். நாயகன் எங்கு சென்றாலும் ஜாதி ஒழிப்பு, உள்ளிட்ட பல விஷயங்களில் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார். இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.

தமிழ் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நாயகன், இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டார்? எப்படி சமாளித்தார் என்பதே படத்தி ன் மீதிக்கதை. இயக்கம் :பாவண்ணன் .இசை:கஜேந்திரன் .ஓளிப்பதிவு:மோகனராமன்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து