உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தெற்கு சீன கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், வேறு சில நாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடுவதால், அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு சீன கடலில் உள்ள குவாங்யான் என்ற மணல் திட்டு பகுதி அருகே அமெரிக்க போர்க்கப்பல் கடந்து சென்றது.இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் லு காங் கூறுகையில், “சீன கடல் எல்லைக்குள் எங்கள் அனுமதி இல்லாமல், அமெரிக்க போர்க்கப்பல் சென்றது, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல். சீன கப்பல்களுக்கும், ஊழியர்களுக்கும் கூட அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. இதேநிலை நீடித்தால், இறையாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும்” என்றார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து