உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹால்டிபூர் பகுதியை சேர்ந்தவர் அருணா. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். தனியார் மருத்துவமனையில் மருதுவதாதியக பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் வார்டுபாயாக பணிபுரிந்த சோகன்லால் வால்மி என்பவன் அவரை 1973-ம் ஆண்டு கற்பழித்தான்.

இந்த கற்பழிப்பு போராட்டத்தில் அருணாவின் தண்டுவட நரம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். அதே மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 37 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் அருணாவை கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பிங்கிகிரானி என்பவர் மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மார்க்கண்டேய கட்சு, ஜியான்சுதா ஆகியோர் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்து கருணை கொலையை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். கருணை கொலை சட்ட விரோதமானது என்று 60 வயதான நர்சு அருணா வழக்கில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுப்படுத்தி உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையை நீதிபதிகள பாராட்டி உள்ளனர்,

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து