உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கனடிய அரசு செய்திக் குறிப்பில் ஹார்ப்பர் அரசு என முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது குறித்த அறிவுறுத்தல் தலைமையிடம் இருந்து வரவில்லை என கருத முடியாது என தனி அலுவலக கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ரேமண்ட் ரிவிட் கூறினார். கனடிய கூட்டரசின் அதிகாரிகள், ஆதார மையமான இந்த கவுன்சில் திங்களன்று ஹார்ப்பர் அரசு என பத்திரிக்கை செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டதை தெளிவாக விளக்கியது.

அரசு தொடர்பான தகவல் விடயங்களில் கனடிய அரசு என்பதற்கு பதிலாக ஹார்ப்பர் அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய வார்த்தைகளை மாற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம் கூறப்படைவில்லை என பழமைவாத கட்சியினர் கூறியுள்ளனர்.

ப்ரைவி கவுன்சில் அலுவலக செய்தித் தொடர்பாளர் ரேமண்ட் மேலும் குறிப்பிடுகையில்,”குறிப்பிட்ட விவகாரங்களில் அரசுத்துறைகள் ஹார்ப்பர் அரசு என்று செய்திக் குறிப்பில் கூற வேண்டியுள்ளது” என்றார்.

கனடிய அரசின் பல்வேறு இணையதளங்களில் ஹார்ப்பர் அரசு என குறிப்புகள் உள்ளன. தனி அலுவலக கவுன்சிலில் 300 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் செய்தியை ஒருங்கிணைப்பதில் பிரதமர் அலுவலகம் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு செய்திக் குறிப்புகளில் ஹார்ப்பர் அரசு என கடந்த மாதம் மட்டும் 297 முறை இடம் பெற்றிருந்தன. 2010 ம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது வரை 571 முறை ஹார்ப்பர் அரசு என செய்திக் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து