உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தாமதித்து வருகின்றமை குறித்து, ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா, பிரிட்டன், மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து நேற்று கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

அதில், இலங்கையில் இன வன்முறைகள், தாக்குதல்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள் போன்றவை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் படையினரின் துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்வது குறித்தும், கவலை வெளியிட்ட இந்த நாடுகள் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னேற்றகரமான அணுகுமுறை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளன.

காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலக பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமே தமக்கு தீர்வு கிடைக்கும் என்ன நீண்டகாலமாகஎதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் காணாமல் போனோரின் உறவுகள் தொடர்பிலான உறுதிமொழியை நிறைவேற்ற முடியும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். கடந்த காலங்களை போன்று, இலங்கையில் ஏற்பட்டிருந்த பிரிவுகள் மீண்டும் ஏற்படும்வரலாற்று சந்தர்ப்பத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து