உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ரஷியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வோல்கோகிராட் நகரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற உள்ளது. இந்நகரில் உள்ள வோல்கா நதியில், திடீரென இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் நதியில் உயிருக்கு போராடியபடி இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணம் செய்த மேலும் ஒருவரை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த வோல்கோகிராட் நகரில், இங்கிலாந்து, துனிஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடக்க சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து