உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வெண்டிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

வெண்டிக்காய் – 1/4 கிலோ,
வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,
செத்தல்மிளகாய் – 1,
பூண்டு – 2 பல்,
துருவியதேங்காய்  – 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெண்டிக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானத்தும், கடுகு, உளுந்தம் பருப்பு,  செத்தல்மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.வெங்காயம் பொன்னிறமானதும், அதில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு கிளறி, வெண்டைக்காய் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

வெண்டைக்காய் வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.இறுதியில் அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காய் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து