உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கனடாவின் நியூபவுன்ட்லாண்ட் மற்றும் லெப்ரடோர் மாகாண கடலில் பெருமளவு எண்ணெய் கலந்துள்ளது.ஹஸ்கி எனர்ஜி என்ற எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் தாங்கிகளை ஏற்றிச்சென்ற சீரோஸ் என்ற கப்பலிலிருந்து சுமார் 250 கனஅடி மீற்றர் எண்ணெய் கசிந்து இவ்வாறு கடலில் கலந்துள்ளது.
உற்பத்தியின் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடும் குறித்த நிறுவனம், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் குறைந்த அழுத்தம் நிலவுவதாவும், அதன் காரணமாக கப்பலில் ஏற்றப்பட்டிருந்த தாங்கிகளிலிருந்து எண்ணெய் கசித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக வான்வழி கண்காணிப்பு விமானமொன்று கண்காணிப்பில் ஈடுபட்டது. இதன்போது இரண்டு எண்ணெய்க் கீற்றுக்கள் கடலில் கலந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கசிவை கட்டுப்படுத்த பணியாளர்களை அனுப்ப முயற்சித்த போதும், ஐந்து தொடக்கம் ஏழு மீற்றர் வரையான அலைகள் மேலெழுவதால் பணியாளர்களை அனுப்ப முடியாமல் உள்ளதென ஹஸ்கி எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நாளை (திங்கட்கிழமை) கடல் அலைகளின் வேகம் குறைவடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த எண்ணெய்க் கசிவானது, நிலத்தை அடையும் சாத்தியக்கூறு இல்லையென தெரிவிக்கப்படுகிறது.குறித்த எண்ணெய் கசிவு காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான நிறுவனங்களுடன் அறிவுறுத்தல்களை கோரி வருவதாக நியூபவுன்ட்லாண்ட் மற்றும் லெப்ரடோர் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து