உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பண்டத்தரிப்பு என்பது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். பண்டத்தரிப்பு நகரசபையானது அதனையண்டிய சிற்றூர்களை உள்ளடக்கியது. அவையாவன: சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம் மற்றும் பிரான்பற்று (பிராம்பத்தை) என்பனவாகும்.

“பண்டத்தரிப்பு” என்ற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருசிலர் இது ஒரு காலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர். வேறு சிலர் இது பாண்டியர் படையெடுப்பின்போது அதன் படைகள் தரித்துச்செல்லும் இடமாக சிலகாலம் இருந்ததால் முன்னர் “பாண்டியன் தரிப்பு” என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பாக மருவியதாகவும் கூறுவர்.

3 Responses to “பண்டத்தரிப்பு என்பது”

 • Sivanantham.S:

  “தரிப்பு ” என்னும் ஈற்று இடப்பெயர் முற் காலத்தில் படைகள், அரச பணியாளர்கள், அலுவர்கள்,பணியாளர்கள்,பயணிகள் முதலானோர் தங்குவதற்கான தனித்தனி பெயர்களைப் பெற்ற இடங்களாக இருந்தன. அவ்வகையிலேயே “தரிப்பு” என்பதும் ஒன்றாகும். இவ்வகையில் பண்டத்தரிப்பு (வலி .தெ.மே.ப) என்பது பண்டம்+தரிப்பு =பண்டத்தரிப்பு. அதாவது பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டு வாணிபம் நடைபெற்ற இடம் எனப் பொருள்படும்.பண்டத்தரிப்பு என்ற இடத்தைச் சுற்றிவரப் பயிர்ச் செய்கைக்குரிய காணிகள் நிறைந்தத ஊர்கள் பலவும் காணப்படுகின்றன.
  அதாவது மாதகல்,சில்லாலை,சங்கானை,சண்டிலிப்பாய், சேந்தாங்குளம் என்ற ஊர்களைத் தொடுத்து நிற்பது பண்டத்தரிப்பு ஆகும். இவ்வாறு அமைந்துள்ள ஊரில் பண்டங்கள் வந்து குவிந்து சந்தைப்படுத்தல் நிலைமை ஏற்ப்பட்டிருத்தல் இயல்பே.எனவே பண்டத்தரிப்பு என்ற காரணச் சிறப்புப் பெயராயிற்று.
  சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் “Panda-Teruppo” எனப் பிரித்து Banda” என்ற சிங்கள ஆட்பெயருடன் சேர்த்துப் பொருள் தடுமாற்றம் அடைகிறார் (1917:47). ஜே.பி. லூயிஸ் என்பவரின் குறிப்பின்படி,பண்டத்தரிப்பில் குழி வெட்டும்போது மத பாண்டத்தில் செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அச் செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்ட இடம் இராணி மாளிகையின் அழிபாட்டிடம் என மக்களால் மரபு வழியாகக் கருதப்பட்டு வருகின்றது. அந்த இடம் “இராசமுருங்கையடி ” என்று அழிக்கப்படுகின்றது என எஸ். கதிரேசு அவர்கள் 1905 ஆம் ஆண்டில் குறிப்பிட்டிருந்தார். எனவே பண்டங்கள் தரித்து வைக்கப்பட்டு சந்தைப்படுத்த பட்டதனாலேயே ” பண்டத்தரிப்பு” என பெயர் வழலங்கலாயிற்று எனக் கொள்ளலாம்.

  “பனிப்புலம்” என்பது பனி +புலம் =பனிப்புலம். இவ்வூரின் எல்லைகளாக வடக்கே பண்ணாகம்,சுழிபுரம்.கிழக்கே சில்லாலை,தெற்கே மாதகல்,மேற்கே வயல்வெளிகள் என்பன அமைந்துள்ளன. இப்பகுதி புல் செறிந்த இருவாட்டி நிலமாக இருந்தமையாலும், புல் நுனியில் பனித்துளிகள் நிறையக் காணப்பட்டமையாலும் பனிப்புலம் என இயற்ப்பெயர் பெற்றது.இப்பெயருடைய குரிச்சிகள் வேறு இடங்களிலும் காணப்படுகின்றன. பணிப்புலம் என்பது சுருங்கி பனிப்புலம் என்று வழங்கிற்று எனவும் விளக்கம் கொடுக்கலாம் . பனிப்புலம் சுளிபுரத்துக்கு (சோழியபுரம் )அண்மையில் இருப்பதால் இவ்விடத்துக்கு சோழ நிர்வாக அடிப்படையிலான தொடர்பு இருந்ததாகவும் கருத இடமுண்டு. ஈழம் முழுவதும் சோழப் பேரரசின் கீழிருந்தபோது அதனை நிர்வகித்த சோழ நாட்டு அரச நிர்வாகிகள் சிலர் இங்கே தங்கலாயினர்.(எஸ்.பத்மநாதன் ௧௯௭௮) அவ்வகையில் “பணி மகன் ” என்ற நிர்வாக அலுவலர் தங்கியிருந்த இடம் பணிப்புலம் என வழங்கி பின்னாளில் பணிப்புலம் என மருவியிருக்கலாம்.

  இங்கு கோவில்ப் பணி புரியும் தொழிலாளர் பலர் வாழ்வதாலும், இவர்கள் கதிர்காமம், திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களில் மடங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்துப் பணி புரிந்தவர்கள் என்ற காரணத்தாலும் இப்பதி பணிப்புலம் என்றிருந்து காலப்போக்கில் பனிப்புலமாயிற்று என்று அவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் மு. விருத்தாசலம் அவர்கள் கருதுகிறார். இதன் குறிச்சிப் பெயர்களாக
  “செருக்கப்புலம்,செட்டியாகுறிச்சி, வடிஒல்லை,காலையடி, கலட்டி, பரந்கிச்சாந்தை, வேட்டையாடுசாந்த்தை, என்பன வழக்கிலுள்ளன.

  மேற்படி, வரலாற்றுக் குறிப்புகளானது, முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியரான “கலாநிதி .இ . பாலசுந்தரம் ” (தற்போது கனடா டொராண்டோவில் வசிக்கிறார் என்று எண்ணுகிறேன்)அவர்கள் எழுதிய “ஈழத்து இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம் ” என்னும் நூலின் பக்கங்கள் 282-283, மற்றும் பக்கம் 260 ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.
  நன்றி!

 • T.BALA. pannipulam:

  நிவர்சனின் கருத்துப்படி பணிப்புலம் என்ற சிறு கிராமத்தின் கிழைகளே காலையடி,சாந்தை,செருக்கப்புலம்,கலட்டி,பெஞ்சிபுலோ,காலையடி,தெற்க்கு,குஞ்சம்கலட்டி,செட்டிகுறிச்சி, இது தான் உண்மை. பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   அபப என்ர பன்னைமூலை தலைநகரம்?

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து