உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

.

9 Responses to “மறுமலர்ச்சி மன்ற கட்டுமான கண்காட்சி”

 • விசு.க.விமலன்.:

  சுதர்சனின் கருத்துக்கள் கட்டாயமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியவையே. ஊரில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள், மதுபோதையில் ஏற்படும் விபரீதங்களும் இக்கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக அமைந்துவிடாதிருப்பதற்கான பாதுகாப்புத் தேவை இங்கு ஆராயப்படவேண்டும். நல்ல கருத்து-இது போன்ற அபிப்பிராயங்களை வரவேற்ப்போம்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  பார்க்க பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. நடைமுறையில் இப்படியான ஒரு மற்றவர்களின் கண்ணை குத்தக்கூடிய கனவுத்திட்டம் எங்கட சின்ன ஊரில் மெய்ப்பட கொண்டிகளுகன்மார்கள் விடுவினமா?
  சிவாஜி திரைப்படத்தில் வரும் சில scenarios தான் எனது மண்டையில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்குது, சிலவற்றை எங்கள் நாட்டிலும் உண்மையில் நிகழ கூடியவையும் கூட. நான் என்ன சின்ன பையன்:- இந்த திட்டத்தில் ஈடுபட்ட பெரியாக்களும் அந்த படத்தை நிச்சயமாக பார்த்திருப்பார்கள் தானே.
  சகல ஆயத்தங்களோடுதானே காவடியை தூக்கி தோளில்வைப்பார்கள், வைத்திருப்பார்கள், வைக்கபோகிரார்கள். என்று எல்லாம் ஒரு அக்கறை கொண்ட சின்ன பொடியன் தன்மனதில் பிசத்துகிறான்…….

 • தங்களின் திட்டங்கள் மிகவும் சிறப்பானதே.மிகவும் அழகாகவுள்ளன.அனைத்தும் சிறப்பாக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

 • அழ பகீரதன்:

  திட்டமிட்டவாறு அமையுமிடத்து எம்மவர்கள் சிறந்த வசதிக்காக பிள்ளைகள சங்கானைக்கோ பண்டத்தரிப்புக்கோ கொண்டலையத் தேவையில்லை. மாறாக சங்கானையிலிருந்து பிள்ளைகள் எமதூருக்கு வரும் நிலை வரலாம். வரலாம் அல்ல வரவேண்டும். மேற்படி கருத்து ஆளமாக சிந்திக்க வேண்டிய விடயமாகும். உண்மையில் இவ்வாறான ஒரு நிறைவான முன்பள்ளி கட்டிட அமைப்பு சங்கானையிலோ அல்லது பண்டத்தரிப்பிலோ இல்லை. நான் அறிந்தவரையில் யாழ்ப்பாணத்திலும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்த முன்மாதிரி அமைப்பை நாம் விரைவாக உருவாக்கி எமது கிராமத்துக்கு அளிக்கவேண்டும். பன்னமூலை பனிப்புலம் வாழ் மக்கள் இலகுவாக தங்கள் பிள்ளைகளை கொண்டுவந்து விடும் வகையில் இந்த முன்பள்ளிக்கட்டிட அமைவிடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 • Ratnarajah:

  எமது சிறுவயதுக்கனவுகள் நனவாதல் கண்டு மகிழ்ச்சி ! சந்தோஸம்!கூடிவாரும் தோழர்களே தோள்கொடுப்போம் ! துணைபுரிவோம்.நல்லது செய்வோம். நன்றே செய்வோம்! அதை இன்றேசெய்வோம்.
  புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள அன்பான நட்புறவுச் சங்களே , அன்பான நண்பர்களே நீங்களே முன்வந்து ஊரின் வளர்ச்சிக்கு உங்கள் கரங்களைத் தாருங்கள். தயவு செய்து பெரிதாக ஒன்றும் சிந்திக்கவேண்டாம்.முயன்றால் முடியாதது என்று ஒன்றில்லை.
  மாறுகின்ற உலகில் மாற்றம் ஒன்றைக் காணவே ஏறுகொண்டு எழுச்சியுடன் எடுத்து அடி வைக்கின்றோம்.
  நாளை எல்லாம் நன்றாக நடக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை என்பதே எமது தும்பிக்கை .
  அன்பான நண்பர்களே எங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் எமது ஊரின் வளர்ச்சிக்கும்,
  எமது ஊரவர்களின் முன்னேற்த்துக்கும் எம்மாலான சிறுபணி செய்வோம்.ஊரவர்கள் எந்நாளும்
  எங்களை வாழ்த்துவார்கள். ஏழைகளின் சிரிப்பில் எங்கள் இதயம் எந்நாளும் வாழும். தொடர்க ஊர்நோக்கியபணி ….

 • Chandrahasan:

  இத் திட்டம் கிராம மேம்பாட்டின் பன்முக பார்வை கொண்டுள்ளது. எமது மக்களின் பண்பாட்டுச் சூழலோடும் இயற்கைச் சூழலோடும் இயைபுறுவதோடு நவீன தொழில் நுட்பத்தையும் அதனால் உருவாகக்கூடிய நாளைய பண்பாட்டையும் உள்வாங்கி இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  இதை உருவாக்கிய ரங்கா ஆர்வமும் ஆற்றலுமுள்ள ஒரு இளம் கட்டடக்கலைஞர். அண்மையில் தமிழ்நாட்டிலுள்ள ஓரவில் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச நகரை பார்வையிட்டு செயலமர்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார். அரவிந்தர் ஆச்சிரமத்தின் விருப்பில் அமையும் இந்த நகர் பற்றி http://www.auroville.org/ என்ற தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.

  மறுமலர்ச்சி மன்ற அபிவிருத்தித் திட்டம் காலத்தால் வரையறுக்கப்படாத போதும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஒத்துளைப்போடு பத்து வருடங்களில் நிறைவுபெறும் என நம்புகிறோம். ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருப்பின் அதைவிட குறுகிய காலத்திலும் பூர்த்தி செய்யப்படலாம்.

  தற்போது கோயில் உள்ளரங்கு முன்பள்ளி ஆகிய மூன்று கட்டுமானங்களை வடிவமைக்கும் பணியில் கட்டடக்கலைஞர் ஈடுபட்டுள்ளார். சர்வதேச தரத்தில் அமையும் முன்பள்ளி சிறுவர் விளையாட்டுத் திடலையும் கொண்டிருக்க்கும். 35 இலட்சம் ரூபா அளவில் செலவாகும் முன்பள்ளி கட்டுமான செலவை ஒன்றோ அல்லது சில நாடுகளைச் சேர்ந்த எம்மவர்கள் பொறுப்பெடுத்தல் விரும்பத்தக்கது. திட்டமிட்டவாறு அமையுமிடத்து எம்மவர்கள் சிறந்த வசதிக்காக பிள்ளைகள சங்கானைக்கோ பண்டத்தரிப்புக்கோ கொண்டலையத் தேவையில்லை. மாறாக சங்கானையிலிருந்து பிள்ளைகள் எமதூருக்கு வரும் நிலை வரலாம். வரலாம் அல்ல வரவேண்டும்.

 • விசு.க.விமலன்.:

  மறுமலர்ச்சி மன்றமென்றே புதுமலர்ச்சி ஆக்குவோம் என்று பாடிய மன்றகீதம் கொண்டுள்ள அர்த்தங்கள் இன்று படிப்படியாக மலரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதை நிறைவேற்றுவதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொண்டாலும் புலம்பெயர் வாழ் அனைத்து மன்ற உறுப்பினர்களும் இத்திட்டத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதே எமது அவா.

  பேச்சுக்களிலும், கருத்துக்களிலும் காலத்தை வீணடிக்காது செயல்களில் நாம் எல்லோரும் இறங்குவதே நன்று. இத்திட்டத்தை உருவாக்கி முளுமைப்படுத்துவதற்கு உதவிய அனைத்து உள்ளங்களிற்கும் எமது நன்றிகள்

 • T.BALA. pannipulam:

  மன்றத்தின் இந்த வரைபடம் அனுப்பிய சந்திரன் அண்ணருக்கு முதற்க்கண் நன்றிகள்.அன்று ஒரு நாள் போட்டவிதை இன்று நமது ஊரில் முளைவிடத்தொடங்கியுள்ளது.இதன் விளைச்சல் நமது ஊரில் பல நன்மைகளைக் கொடுக்கும்.சிறந்த ஒரு பெயருடன் நமது கிராமம் விளங்கும் என்பதை யாரும்மறுக்கமுடியாது.எப்பவும்தூரநோக்கம் கொண்டவர்களே பணிப்புலம் மக்கள் என்பது 65 வருடத்தின்முன் நம் மூதாதையர் நிரூபித்தார்கள்.இன்று இன்றைய புலம்பெயர் எம்மக்களிடம் இன்றைய தேவை கருதிய சிறந்ததிட்டம்.செயலாக்கம் அனைத்துபுலம் பெயர் மக்களாகிய நம் கடமையாகும். திட்டங்கள் மக்களின் எதிர்கால தேவைகள் கருத்தில் கொள்ளவேண்டும். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

 • அழ பகீரதன்:

  வெறும் வாழ்த்துக்கள் மட்டும் இந்த திட்டத்துக்கு போதுமானதல்ல. அந்தந்த நாடுகளிலுள்ள மக்கள் கூட்டம் கூடி இதற்கான முன்தயாரிப்பு கூட்டங்களை கூடி ஆக்கபூர்வமான பங்களிப்பை தருக.கூடி விவாதித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை நல்க வேண்டுகின்றோம். நீண்டகாலத்திட்டமிடலில் இந்த நிலைக்கு வந்துள்ளோம். இதன் முதற்கட்டமாக இன்று மன்றத்தில் கூடிய கூட்டத்தில் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுவதாகவும் முதற்கட்டமாக கோயில் தியான மண்டபத்தை அமைக்கும் வேலைகளை இத்திட்டத்துக்கமைவாக அமைப்பது என்பதாகவும் தொடர்ந்து உள்ளக அரங்கு முன்பள்ளி கட்டிடம் விளையாட்டு வசதியுடன் அமைப்பதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த திட்டம் இவ்வளவு விரைவாக தொடங்குவதையிட்டு சகலதரப்பினருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம், பயன்களை விரைந்து பெற துடித்துகொண்டிருக்கும் மறுமலர்ச்சி மன்றத்தினர் சார்பாக அழ பகீரதன் மறுமலர்ச்சி மன்றம் காலையடி பண்டத்தரிப்பு.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து