உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தற்போது லிபியாவிற்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தும் மேலை நாடுகள் மனிதர்கள் அல்ல அவர்கள் மிருகங்கள் என்று நேற்று மாலை லிபிய தொலைக்காட்சியில் கடாபி பேசினார். தனது படைகள் தரைவழி தாக்குதலை நடாத்தி முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது களத்தில் நிற்கும் கூட்டுப்படையணி மிருகங்கள், பயங்கரவாதிகள், மோசமானவர்கள் என்று திட்டித் தீர்த்தார். மேலை நாட்டு படையணிகள் அன்று சர்வாதிகாரி ஹிட்லரும், முசோலினியும் செய்த தவறையே இன்று செய்கிறார்கள். இந்த நாடும், இங்குள்ள எண்ணெய் வளமும் எமக்கு ஆண்டவன் தந்த நன்கொடை இதை அன்னியர் கைப்பற்ற விட முடியாது. ஒவ்வொரு மக்களும் ஆயுதங்களுடன் களமிறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நாம் ஒருபோதும் நாட்டைவிட்டு ஓடப்போவதில்லை இந்தப் போரில் நாம் வென்றேயாவோம் என்றும் சூழுரைத்தார். லிபியாவில் உள்ள ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் ஆயுதங்களை எடுத்து களமிறங்குங்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி அவருடைய முகத்தைக் காண்பிக்கவில்லை. தங்க நிறத்திலான ஒரு கை அமெரிக்க ஏவுகணையை உடைத்து நொருக்குவதைப் போன்ற ஒரு படத்தின் பின்னால் அவருடைய குரல் வெளி வந்தது.

2 Responses to “மேலை நாடுகள் மிருகங்கள் ! போரில் வெல்வேன்..! கடாபி”

  • T.BALA. pannipulam:

    கடாபியின் கதையை நான் தான் வாங்கியுள்ளேன்.இந்த படம் அமிரதாப்பை கடாபியாக நடிக்க கேட்டபடி.என்னும் முடிவாகவில்லை.கடைசிகட்டம்தான் முடிவு கடாபிஎன்னும் என்னிடம் சொல்லவில்லை முடிவைபார்த்து மற்றைய நடிகர் தெரிவாகும்,தயாரிப்பு இருவர் போட்டி ஐங்கரன்,மாறன் இது தற்ப்போது 5,000 தியேட்டரில் பதிவு. கடாபி றெடி நீங்கள் றெடியா. த.பாலா

  • மத்திய கிழக்கான்:

    கடாபி அண்ணா! சதாம் குசெயின் பிடிபடுகிறத்துக்கு முதல் இதைப்போலத்தான் சொன்னவர். முபாரக் அண்ணரும் உப்பிடித்தான் கத்தினவர். நீங்களும் சும்மா கதைச்சுக்கொண்டிருக்காம காசை முதலில பட்டுவாடாப் பண்ணிப்போட்டு எங்கையாவது ஒழிச்சோடப் பாருங்கோ. 30 -40 வருசம் உலகத்தை ஏமாத்திக்கொண்டிருக்கிறவை எல்லாரும் இனிமேலாவது கொஞ்சம் யோசியுங்கோ

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து