உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடைபெறும் மோமர் கடாபியின் வீடு மீது ஒரு ஏவுகணை தாக்கியது.
லிபியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல், கடாபி சர்வாதிகார ஆட்சியை விரட்ட மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, லிபியா ராணுவம் வான் வழியே விமானங்கள் மூலம் வீசி வருகின்றன.

சொந்த நாட்டு மக்களை தாக்கிவரும் லிபிய அரசை, ஆட்சியை விட்டு வெளியேற்றவும், பொதுமக்களை பாதுகாக்கவும் கூட்டுப்படைகள் தாக்குதலைத் துவக்கி உள்ளனர்.

லியியா வான் எல்லை மீது விமானம் பறக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்ததை தொடர்ந்து, பிரான்ஸ், யு.எஸ், பிரிட்டன் படைகள் தாக்குதலைத் துவக்கி உள்ளன.

லிபியத் தலைநகர் திரிபோலியில் கடாபி வீடு உள்ளது. இங்கு ஒரு ஏவுகணைத் தாக்குதல் நடந்தது. இதில் கடாபி கட்டிடம் நொறுங்கியது.

கடாபி மட்டுமே எங்களது இலக்கு அல்ல என யு.எஸ்.ஈ அதிகாரிகள் கூறினர். ஞாயிற்றுக்கிழமை இரவு போர் விமானத்திற்கு எதிரான தாக்குதல் தலைநகர் திரிபோலிக்கு மேல் அதிகரித்தது. பாப் அல் அசிசியா பகுதியில் இருந்து, புகை மண்டலம் எழுந்தது. இங்குதான் கர்னல் கடாபியின் ராணுவ மையம் மற்றும் உள்ளது.

கூட்டுப்படைகள் தாக்குதலில் 3 அல்லது 4 அடுக்கு மாடி கட்டிடம் நொறுங்கிப்போனதை மேற்கத்திய பத்திரிக்கையாளர்களிடம் லிபிய அதிகாரிகள் காட்டினர்.

முன்னதாக பென்டகளில் கடற்படை துணைத் தளபதி வில்லியம் கார்ட்னே கூறுகையில் லிபியா வான் எல்லையில் விமான பாதுகாப்புத்திறன் மேம்பட்டுள்ளது என்றார்.

தரைப்படைகள் போராட்டப் பகுதிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. கர்னல் கடாபியோ அல்லது அவரது வீடோ தங்களது இலக்கு அல்ல என்றும் கடற்படைத் துணைத்தளபதி தெரிவித்தார்.

தங்களது படைகள் போர் நிறுத்தத்தை கடைபிடிப்பதாக லிபியா அரசு கூறி வருகிறது. ஆனால் இது குறித்து ஒபாமா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலான் சந்தேகம் எழுப்பினார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து