உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பண்டத்தரிப்புசண்டிலிப்பாய் வீதியில் இரவு நேரங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள், இளைஞர்களின் சேஷ்டைக்கு ஆட்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர் .
பண்டத்தரிப்பு தவறணைக்கு முன்பாக இரவுநேரங்களில் கூடும் இளைஞர்கள் மது போதையில் அந்த வீதியூடாக பயணம் செய்யும் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுடன் தவறான வார்த்தைகளால் திட்டியும் வருகின்றனர்.
ஏற்கனவே மேற்படி வீதியில் பண்டத்தரிப்பு சந்தி, முல்லை யடிச்சந்தி, தியான இல்லச் சந்தி ஆகிய இடங்களில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் இளைஞர்களின் இந்தச் சேஷ்டை குறையவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையினால் அவசர தேவைகளுக்கு இரவு நேரங்களில் பண்டத்தரிப்பு கடைத்தொகுதிகளுக்கு செல்ல முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

6 Responses to “பண்டத்தரிப்பு தவறணைக்கு முன்னால் இளைஞர்கள் அட்டகாசம்:பொதுமக்கள் பாடு திண்டாட்டம்”

 • norway sivasakthebandian:

  அப்ப நீங்கள் எல்லாம் பணிப்புலமோ.இப்ப தெரியுதோ சொர்க்கமே என்றாலும் இது நம்ம ஊரைப்போல் ஆகுமா.அன்று கடவுள் நின்று நிறுத்தி தண்டனை கொடுத்தவர்.இப்ப அவர் உடன் தீர்ப்பே.இந்த தீர்ப்பை எதிர்த்து எரிக்சுல்கைம் மூலம் தான் வாதாடலாம். சிவசக்த்திபாண்டியன் நோர்வே

 • யார் சொன்னது நாங்கள் பண்டத்தரிப்பு என்று ?
  நாங்கள் பனிப்புலத்தார். அது பண்டத்தரிப்பில்த்தான் அந்தப் பிரச்சனை, எங்கள் ஊரில் மது என்ற சொல்லுக்கே இடம் இல்லை.
  எங்கள் பனிப்புலத்தல்” ’24′” மணி நேர தொல்லை பேசி இருப்பது மகிந்தாவுக்கே தெரயும் யாரும் மத முடியாது….

 • stop panrathuku master plan onru irukku

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  ஆகா…தொடங்கிட்டார் (கருத்து)சர்ச்சையை உருவாக்க…LOL
  _
  தவறணை என்ற சொல்லு கேட்டு கனகாலம்..நன்றி இந்த சொல்லை ஞாபகபடுத்தியமைக்கு..

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   ஆகா இணையத்திட்ட censor board கூட இருக்கிறது…தவறணையில் விற்கப்படும் பொருளை பற்றி (ஏலுமென்றால் கண்டுபிடியிங்கள் பார்போம்: க-நவில் தொடக்கி ளு-நவில் அந்த சொல்லு முடியும்) நான் முன்பு எழுதிய வசனம் ஒன்று இங்கு தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதை காணக்கூடியதாக இருக்கு….வியப்பான விடயம்..நான் panipulam.net ஐ கொஞ்சம் குறைய எடைபோட்டுவிட்டேன் ஐயா..
   இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஒரு உதவி: அது ஒரு குடிபானம்.

 • T.BALA. pannipulam:

  இது பண்டத்தரிப்பு என்று கூறும் மக்களுக்கு பெருத்த அவமானமாகும்.வெளிநாடுகளில் வாழும் பண்டத்தரிப்பு மக்கள் இதைக்கவனத்தில் எடுப்பார்கள். பணிப்புலம் த.பாலகுமார் டென்மாரக்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து