உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நன்றி http://www.newsnesan.com/

7 Responses to “மன்றத்தில் அமைக்கப்படவிருக்கும் கோவிலின் அத்திவாரப்படங்கள்”

 • selvarajah:

  18-05-11
  அம்பாள் துணை நிற்க.
  மறுமலர்ச்சி மன்ற உறப்பினர்களுக்கு பணிப்புலம் வாழ் மக்களின் அன்பான வேண்டுகோள்.
  தங்கள் ம.ம.ம கட்டுமானப்பணிகள் வரவேற்கத் தக்கதே.தங்களுடைய நீச்சல் தடாகம் அமைப்பது பற்றி;
  சிலகலாச்சாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எம்மவர் அஞ்சுகின்றனர்.காரணம் அயலூர்களில் இப்போது நீ.தடாகம் இல்லாத்தினால் அவர்களும் வந்து நீந்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும்.அப்படிக் கூட்டம் கூட்டமாக வந்து குளிக்கம்போது சந்தோசத்துக்காக இலகுவாக்கக் கிடைக்கக் கூடிய மதுவகைகளைப்பயன்படுத்தவும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றது. மதுபோதையிலோ,மாது போதையிலோ இருக்கும் இளைஙர்கள் வழியில் நடமாடும் மாதுக்களுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளவும் அல்லது காதல் வார்த்தைகளைக்கூறிப் பெண்களை ஏமாற்றி தங்கள் காமலீலைகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற சீர்கேடுகள் ஏற்பட்டுவிடும்.அப்படித் தவறுகள் ஏற்ப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை யாராவது தட்டிக் கேட்டால் தனிப்பகை ஊர்ப்பகையாகி மோதல்கள் உண்டாகும்.என்ற காரணங்களினால் நீ.தடாகம் வேண்டாம் என்று பணிவாக்கக் கேட்டுக் கொள்கின்றனர்.

  மற்றைய அபிவிருத்திப் பணிகளினால் கூட சில இழப்புக்கள் இருக்கின்றன. எமது மக்களில் 75%ஆனவர்கள் நிவாரணப்பணத்தினை வாங்குபவர்கள். இவ்வளவு பெரிய ,தொகைப்பணத்தில் கட்டங்கள் கட்டி ஊரை முன்னேற்றும் போது, அவர்களுடைய நிவாரணத்தில் அரசு கைவைத்துவிடும் என்ற அச்சமும் அவர்களிடம் உண்டு.
  அதனையும் உணர்ந்து முடிவெடுக்குமாறு அன்பான உள்ளங்களைக் கேட்டுக்கொள்கின்றனர் எமது உறவுக்கள.
  நன்றி.வணக்கம்.
  பணிப்புலத்து மக்கள்.

 • Chandrahasan:

  இன்று நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து ‘பண்டாரங்கள் வீடு கட்டுவதை போல’ என்ற வாக்கியத்தை நீக்கிவிடும்படி கேட்டிருந்தார். அப்போதுதான் அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை உணர்ந்தேன். விளக்கமில்லாமல் நான் எழுதிய படியால் அது சிலரின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு மனதார மன்னப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

  இப்போது அதன் விளக்கத்திற்க்கு வருகிறேன். இங்கு தமிழரொருவருடைய வீட்டை வடிவமைத்துக் கொண்டிருக்கையில் எதிர்கால பொருளாதர நிலை தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்றேன். அப்போது அவர் ஓமோம் பண்டாரங்கள் வீடு கட்டுவதுபோல கட்டக்கூடாதுதான் என்றார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்றேன். அவர்கள் ஒண்டையும் யோசியாமல் அந்தந்த நேரம் கிடைக்கும் காசை வைச்சு கட்டிக்கட்டிக் கொண்டேயருப்பார்கள் என்றார். அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டேன். பார்க்கவில்லை ஆனால் பிளான் இல்லாமல் வீடு கட்டுபவர்களைப் பார்த்து அப்படித்தான் ஊரில் சொல்லுவார்கள் என்றார். உடனே நான், அப்படி இல்லை நானும் ஒரு பண்டாரம்தான். எல்லா ஊரில் உள்ளது போலத்தான் எங்கள் ஊரிலும் வீடு கட்டுகிறார்கள் என்றேன். அவர் திகைத்துப்போய் ஆளை விடு நான் தெரியாமல் சொல்லிப்போட்டேன் என்றார். அப்போதுதான் யாழ்ப்பாணத்தவரிடமிருக்கும் இந்த வழக்கு எனக்கு தெரிந்தது.

  நான் எனது ஊரையும் சாதியையும் எண்ணி என்றும் பெருமைப்படுவதோடு அதற்கு பெருமை சேர்க்க விரும்புகிறவன். எங்களில் படித்தவர்கள் அயலவரிடம் நண்பர்களிடம் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ்கையில் பல்கலைகழக நண்பனொருவனின் ஆய்வுக்கு எனது சாதியை ஆய்வுப் பொருளாக எடுக்க வைத்தேன். நான் வேண்டுவதெல்லாம் நான் கற்ற தொழிலை எனது ஊருக்கு உதவ வழிவிடுங்கள் என்பதே.

  மீண்டும் உணர்வு வசப்பட்டு எழுதிய வாக்கியங்களால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

 • Chandrahasan:

  கட்டடக்குழுவுடன் இன்று தொடர்பு கொண்டபோது கோயில் நிர்மாணம் வரைபடங்கள் வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதை விரைவில் அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். இளைஞர்கள் தங்கள் அபிப்பிராயங்களை பண்போடு எதிர்புணர்வு காழ்புணர்வின்றி உணர்ச்சிவசப்படாது வெளியிடுவது அவசியம் என தெரிவித்தனர். ஒழுங்கான கருத்து பரிமாற்றமின்மையே குழப்பங்களுக்கு காரணம் என ஏற்று இனிமேல் இவ்வாறு நடக்காதென உறுதியாக நம்புவோம்.

 • Chandrahasan:

  அண்மைகாலமாக எனது வாழ்வில் பல சோதனைகள் வேதனைகளைச் சந்தித்துள்ளேன். அவை எல்லாவற்றையும் விட மோசமாக இரண்டு நாட்களாக நித்திரை கொள்ள முடியாதளவிற்கு வேதனையை தந்தது இந்தப் படங்கள். இரண்டு நாட்களாக இடைவிடாது உலகெங்குமிருந்து எம்மவர்கள் தொடர்புகொண்டு தமது கவலையை ஏமாற்றத்தை தெரிவித்தனர். கனவு கனவாகியே போய்விடுமோ என சந்தேகம் கொண்டனர்.

  சுருங்கச் சொன்னால் இது அறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் கிடைத்த சம்மட்டியடி. தாயகத்தில் முன்மாதிரியாக எதிர்கால சமூகத்தின் நலன் கருதி விற்பன்னர்களால் திட்டமிடப்பட்ட முதல் அபிவிருத்தித் திட்டம் என்ற பெருமையோடு அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிற புலம்பெயந்த எம்மவர்களது மூஞ்சையில் காறி உமிழப்பட்டுள்ளது.

  இந்த அத்திவாரத்திற்கும் திட்டத்திலுள்ள கோயிலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அவசரவசரமாக எந்த வரைபடமுமில்லாமல் பின்னால் உள்ள மடத்தை அப்படியே முன்னால் நகர்தியுள்ளார்கள். கட்டடகலைஞர் கீறி அனுப்ப முன்னரே அத்திவாரம் போட்டுவிட்டார்கள். கட்டடக்கலைஞரும் சாட்டையடி. அவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்கும் என நம்புயிருந்த எமக்கும் சாட்டையடி. இது பற்றி தேவராஜாவிடம் கதைத்தபோது சகலவேலையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

  திட்டத்தின் முகப்பில் அமையவிருக்கும் கோயிலின் கட்டடக்கலை வடிவம் மிகமுக்கியமானது. அது பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அழகாக இருக்க வேண்டும். பெரிதுதான் அழகென்ற மாயை களையுங்கள். கொம்பனித்தெருவில் தண்ணீருக்கு நடுவே அமைந்த சிறிய கங்காராம பன்சலவே கொழும்பில் அழகான பௌத்த கோயிலாக வெளிநாட்டவர்களும் வந்து பார்வையிடுகிறார்கள். இது இலங்கையின் புதிய பாராளமன்றத்தை வடிவமைத்த ஜிவ்ரி பாவா என்ற புகழ்பெற்ற கட்ட்டக்கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.

  எமது கட்டடக்கலைஞரின் Master Plan இல் உள்ள அமைப்பு சூழலுடன் இயைபுறுவதுடன் திராவிடக் கட்டடக்கலையும் தியான உணர்வையும் உள்வாங்கியுள்ளது. இவ்வமைப்பு மெருகூட்டப்பட்டு கட்டுவதற்கு தேவையான வரைபடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். பல நூறு வருடங்கள் நிற்கவேண்டிய கட்டடம் எப்படி அமையவேண்டுமென்பதை சில மணித்தியாலங்களில் தீர்மானிக்க முடியாது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இரண்டு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் சிறிய நிர்மாண வேலையை திட்டமிட இரண்டு வருடங்கள்கூட எடுப்பார்கள்.
  மற்றோர் பார்த்து வியக்க நாம் பெருமை கொள்ளும் வகையில் திராவிடக் கட்டடக்கலையின் நவீன வடிவில் அழகிய சிறிய கோயிலை கட்டடக்கலைஞருடன் இணைந்து உருவாக்கும்வரை பொறுத்திருங்கள்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  சின்ன வயதிலே வெற்றிமடத்தில் அலைஞ்சு திருஞ்சு விளையாடியிருக்கிறோம், சரஸ்வதி பூசைக்கு கடலையும் வாங்கி திண்டிருக்கிரோம். ஆனால் அந்த கோயிலுக்குள் இருக்கும் கடவுள் எது (sorry – சாமிகுற்றம். எவர்) என்று தெரியாது – இப்பவும் கூட. என்னைபோல் பல பேர் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த கோயிலில் வந்து பூசை செய்கிற aunty ஐதான் கடவுளாக என் சகவயது (விளையாட்டு) நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள்.

 • சச்சி:

  இங்கே கட்டப்படுவது கோயில் இல்லை பிரச்சனை.

 • நலன்விரும்பி:

  எதிர்காலத்தில் பணிப்புலம் அம்மன் இந்த கோவிலுக்குத்தான் வேட்டையாட வரப் போவதாய் வதந்தி….

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து