உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் தமது நாட்டின் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க பிரித்தானியா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இடையே உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய பொருளாதார பகுதி மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தை சேர்ந்த நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலேயே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளை சேர்ந்த குடிமக்களின் உரிமைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் பாதுகாக்கப்படுமெனவும் அதேபோல் இந்நாடுகளில் வாழும் பிரித்தானியர்களின் உரிமைகளும் பாதுக்கப்படுமெனவும் இந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில் ஒப்பந்தம் எதுவும் இதுவரை எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து