உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியை சேர்ந்த கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (17) யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார்

உயிரிழந்த மாணவனின் சடலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு தாய் தந்தையரால் கொண்டு வரப்பட்டுள்ளது.

மகனது பிரிவை தாங்க முடியாத தாயார் நேற்று (18) அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு மக்களை பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்த தாக்கத்தை தாங்க முடியாத யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஊரே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து