உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கடந்த 22 ஆம் திகதி காணாமற்போன வயோதிபர் ஒருவரின் சடலம் ஊதிப்பெருத்த நிலையில் நைலோன் கயிற்றால் வயிற்றுப் பகுதி கட்டப்பட்ட நிலையில் வயல் கிணறு ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான செபஸ்தியாம்பிள்ளை மரியநாயகம் (வயது 65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

பிரஸ்தாப நபர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

பல இடங்களிலும் தேடி அவரைக் காணவில்லை. இந்நிலையில், நான்கு நாள் கழிந்த நிலையில் அவரது சடலம் ஊதிப் பெருத்த நிலையில் மாதகல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்டது என்றும் வயிற்றுப் பகுதியில் நைலோன் கயிறு கட்டப்பட்டிருந்தது என்றும் கல் ஒன்று போடப்பட்ட பிளாஸ்ரிக் பை உடலில் இணைக்கப் பட்டிருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரி புஞ்சிஹேவா தலைமையிலான பொலிஸாரும் இளவாலைப் பொலிஸாரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து