உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

லிபியா மீதான நடவடிக்கையில் நோட்டோ படைகள் இரட்டை நிலையை கடைபிடிப்பதாக ஜேர்மனி குற்றம் சாட்டியுள்ளது.
லிபியா மீது முழுத்தடை விதிக்காமல் அந்த நாட்டில் இருந்து நோட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கிக் கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில் அந்த நாட்டில் குண்டுகளை வீசிக் கொண்டிருப்பது என்ன நியாயம் என ஜேர்மனி கேள்வி எழுப்பி உள்ளது.

லிபியாவில் 41 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தும் கர்னல் கடாபியை பதவியில் இருந்து அகற்ற கடந்த பெப்ரவரி 15 ம் திகதி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு லிபிய ராணுவம் வான் வழித் தாக்குதைலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கும் கடாபி ஆட்சியை கட்டுப்படுத்த லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதிக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து லிபிய போர் விமானங்களை வீழ்த்த பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், கனடா என நோட்டோ கூட்டுப் படைத் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதலில் ஜேர்மனி ஈடுபடவில்லை. இதனால் ஐரோப்பிய கூட்டாளிகளின் விமர்சனத்திற்கு ஜேர்மனி ஆளாகியுள்ளது. இந்த நிலையில் லிபியா மீதான முழுத்தடையை பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் கடைபிடிக்கவில்லை. குண்டுகளை வீசும் அந்த நாடுகள் லிபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து வருகிறது என ஜேர்மனி மேம்பாட்டுத் துறை அமைச்சர் திர்க் நேபல் கூறியுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து