உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு ஒரு மணித்தியாலம் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாத கடைசி சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணிவரை உள்ள ஒரு மணி நேரம் பூமி நேரமாக கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த நேரத்தில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் மின்விளக்குகளை அணைக்க வேண்டும். இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) என்கிற அமைப்பு கடந்த 2007-ம் ஆண்டில் இந்த நடைமுறையைக் கொண்டு வந்தது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பூமி நேரம் அந்தந்த நாடுகளின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் முதலில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இதன் பிறகு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என ஒவ்வொரு கண்டமாக விளக்குகள் அணைக்கப்பட்டன. ___

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து