உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பணிப்புலம், காலையடி, காலையடி தெற்கு, சாந்தைமுன்னீடு
நீண்டகால யுத்தம் காரணமாக எமது பிரதேசங்கள் அபிவிருத்திகள் முடக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய பரிதாபகரமான நிலையில் இருப்பது சகலரும் அறிந்ததே. அபிவிருத்தியில் ஒரு நீண்ட பாச்சலை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது நமது பூமி. ஆற்றலும் அறிவும் மிக்க சமூதாயத்தை கட்டி எழுப்பாமல் இறக்குமதி செய்யப்படும் எந்தவித அபிவிருத்தியையும் சாத்தியமற்றதும் பயனற்றதுமாகும். எனவே ஒரு புதிய சமூதாயத்ததை கட்டியமைக்க தேவையான அக புற சூழலை உருவாக்குவதே இன்றைய தேவையாகிறது. இச் சமூக மேம்பாட்டு திட்டம் கிராமிய மட்டத்தில் நீண்டகால நோக்குடைய உறுதியான சமூகத்தை கட்டியமைக்க தேவையான வசதிகளை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. இது எமது கிராம மக்களுக்கு குறிப்பாக பணிப்புலம், காலையடி, காலையடி தெற்கு, சாந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.


இச் சமூக மேம்பாட்டுத் திட்டம் தாயகத்திலுள்ள கிராமங்களின் பொதுவான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டபடியால் இதை ஒரு மாதிரி அபிவிருத்தி திட்டமாகக் கொள்ள முடியும். இம் மாதிரி அபிவிருத்தித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாயகத்திலுள்ள மற்ற கிராமங்களும் தமது சூழல் வசதிகளுக்கேற்ப திட்டங்களை வகுத்துக்கொள்ள முடியும். 80களில்
நோக்கு
• சிறுவர்கள் தமது சுய ஆற்றலை அறிவை சகல துறைகளிலும் வளர்த்துக்கொள்ள வாய்பளித்தல்
• ஆரோக்கியமான சமூக பண்புகளை மீண்டும் கட்டியமைக்க தேவையான உள்கட்டுமானங்களை ஏற்படுத்தல்
• இளஞர்களின் எதிர்காலத்தை வளம்படுத்தக்கூடிய தொழில்களை அறிமுகம் செய்தலும் பயிற்சியளித்தலும்.
• சகல பருவத்தினரின் உடல் உள அபிவிருத்திக்கான விளையாட்டு மற்றும் களியாட்ட வசதிகளை ஏற்படுத்தல்.
• கலை இலக்கிய புத்தாக்க சிந்தனைகளை வளர்த்தல்.
• வயது முதிர்ந்தோருக்கு ஆரோக்கியமான அக புற சூழலை உருவாக்குதல்

செயல்த் திட்டங்கள்
1. விளையாட்டு
உதைபந்தாட்ட திடல்
சகல கட்டுமானங்களும் ஒரு உதைபந்தாட்ட திடலை சுற்றியே அமைக்கப் படும். திட்டத்தின் மையமான அமையும் விளையாட்டு திடல் சர்வதேச தரத்தில் தட கள விளையாட்டுகளும் உதைபந்தாட்டமும் நிகழக்கூடிய வகையில் விஸ்தீரிக்கப்படும். இது தற்போதுள்ள மடம் இடம் மாற்றப்பட்ட பின்னரே சாத்தியமாகும்.
இவ்விளையாட்டுத்திடல் பிராந்திய விளையாட்டுப் போட்டிகளை ஊக்கிவிப்பதோடு உள்ளுர் பாடசாலைகளின் மெய்வல்லுனர் போட்டிகளை வைப்பதற்கும் ஏதுவாக அமையும்.
சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்கப்படும்போதும் நட்புறவை வளர்த்தல் உடல உள ஆரோக்கியத்தை பேணுதல் என்ற விளையாட்டின் அடிப்படை நோக்கை நிறைவேற்றுவதே பிரதானமாகும்.  
உள்விளையாட்டரங்கு
உடற்கட்டு விளையாட்டிற்கு ஏற்ற வகையில் அமையும் உள்ளரங்கில் மென்பந்தாட்டம், கரம், உடற்பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சிகளை பெறக்கூடியதாயிருக்கும். விளையாட்டு சம்பந்தமான பயிற்சிப் பட்டறைகளை நடாத்துவதற்கும் விளையாட்டுப் பொருட்களை சேகரித்து வைப்பதற்கு வசதிகளும் இங்கு அமைக்கப்படும்.
வலைப்பந்தாட்டம், தாச்சி
விளையாட்டுத்திடலின் ஒரு பகுதி வலைப்பந்தாட்டம் மற்றும் பாரமபரிய விளையாட்டுக்களான தாச்சி போன்றவற்றிற்கு ஏற்ற விதத்தில் அமையும்.
நீச்சல் தடாகம்
உடலிலுள்ள தசைநார்கள் எல்லாவற்றிற்கும் வேலை கொடுக்கும் ஒரேயோரு விளையாட்டு நீச்சலே என்பது உடற்பயிற்சியாளர்களின் அறிவுரை. அதனாலேயே அவுஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் நீச்சல் ஆரம்ப பாடசாலைகளில் கட்டாய பாடமாக்கப்பட்டள்ளது. எனவே சிறுவர்கள் நீச்சலை முறைப்படி கற்றுக்கொள்ள ஒரு நீச்சல் தடாகம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகிறது. இத்திட்டத்தின் நிறைவில் நீச்சல் கற்றுக்கொள்ள அபாயமமிக்க கேணிகளையோ கிணறுகளையோ கடலையோ நம்பியிருக்க வேண்டிய தேவையில்லை.
2. முன்பள்ளி
முன்பள்ளி எனப்படும் பாலர்பாடசாலை இன்றைய கல்வித்திட்டத்தில் மிக முக்கிய அம்சமாகிறது. ஒரு பிள்ளையினுடைய சமுக வாழ்க்கை இங்குதான் ஆரம்பிக்கிறது. பாதுகாப்பான பெற்றோரிடமிருந்து அன்னியமான புறச்சூழலுக்கு வரும் பிள்ளை மற்றவர்களுடன் சூழலுடன் ஏற்படுத்தப்போகும் தொடர்ப்பை தீர்மானிக்கும் இடமே முன்பள்ளி. எனவே அதன் அமைப்பும் சூழலும் பிள்ளையுடைய உளவளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைவது அவசியம்.
எமது கிராமங்களில் முன்பள்ளிக்கென வடிவமைக்கப்பட்ட இடம் கிடையாது. இத்திட்டத்தில் அமையவிருக்கும் முன்பள்ளியே அந்தவகையில் முதலாவதாகவிருக்கும். இந்த முன்பள்ளி இயற்கைச் சூழலுடனும் சிறுவர் விளையாட்டுத் திடலுடனும் இணைந்து பிள்ளைகளின் கற்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் அமையும்.
3 கலை கலாசாரம்
உள்ளரங்கு
திட்டத்தில் அதிக பொருட் செலவில் உருவாகும் உள்ளரங்கு நவீன வசதிகளை கொண்டிருக்கும். 300 பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய உள்ளரங்கு மேடை நிகழ்சிகள் கலாசார நிகழ்வுகளோடு திரைப்படங்களை பார்க்கக்கூடிய ஒலி ஒளி அமைப்புகளையும் கொண்டிருக்கும்.
நவீன வசதிகளை கொண்டிருக்கும் இவ்வரங்கு கருத்தரங்கங்கள் பட்டறைகள் விரிவுரைகள் நடாத்துவற்கு ஏற்றவிதத்திலும் அமைந்திருக்கும். இவ்வசதிகளைப் பயன்படுத்தி வீடியோ சினிமாக்கள் தயாரிப்பதும் ஊக்கப்படுத்தப்படும்.
திறந்தவெளியரங்கு
பாரம்பரியமான மேடைநிகழ்வுகளை செய்யக்கூடிய திறந்தவெளியரங்கு உதைபந்தாட்ட திடலைப் பார்த்தவண்ணம் அமைக்கப்படும். நவீன ஒலி ஒளியமைப்புக்களை கொண்ட இவ்வரங்கு ஆண்டுவிழாக்கள் விளையாட்டுப்போட்டிகள் நடாத்துவதற்கு ஏற்றவிதத்தில் அமைந்திருக்கும்.
4 கல்வி
கணணியகம், மொழிப்பயிற்சியகம்
பாடசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத நெறிகளை கற்கும்; வாய்ப்பு இந்தக் கல்விநிலையங்களில் வழங்கப்படும். குறிப்பாக கணனியியல் ஆங்கிலம் சிங்களம் உட்பட பிற மொழிப்பயிற்சி, கலை இலக்கியப் பயிற்சி இங்கு வழங்கப்படலாம். தேவைகளைப் பொறுத்து இது விஸ்தரிக்கப்படலாம்.
தொழில் பயிற்சியகம்
எமது பிரதேசங்களில் தொழில்பயிற்சி பெற்றவர்கள் அpக அரிதாகவே காணப்படுகிறார்கள். அனேகமான தொழில் செய்பவர்கள் அது சம்பந்தமான பயிற்சி எதுவும் இல்லாதவர்களே. மேலும் குடாநாட்டிலுள்ள அரச தொழிற் பயிற்சிக் கல்லூரிக்கு சென்று கற்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இத்தொழில் பயிற்சியகம் இளைஞர்களிடம் தொழிற்பயிற்சியில் ஆர்வைத்தை தூண்டுவதற்கும் வழிகாட்டுவதற்கும் ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.
நூலகம்
தற்போது உள்ள வாசிகசாலை அலுவலகமாகவும் அரும்பொருட் காட்சியமாகவும் மாற்றப்பட்டு சகல வசதியுடைய நூலகம் அமைக்கப்படும். 
5 ஆத்மிகம்
வளவின் மத்தியில் அமைந்துள்ள வெற்றிமடம் திட்டத்தின் முகப்பில் இடமாற்றப்படும். அபிவிருத்தித்திட்டத்தின் நுளையாயிலாக அமையும்; இவ்வமைப்பு திராவிடக் கட்டக் கலை வடிவில் தியானத்திற்கும் வழிபாட்டில்கும் ஏற்ற சூழலில் உருவாக்கப்படும். 
6 முதியோர் பராமரிப்பு
பாலர் பாடசாலைக்கு அருகில் முதியோர்கள் உள உடல் ஆரோக்கியத்தை பேணும் வசதிகள் உள்ள முதியோர் இல்லம் அமைக்கப்படும்.   
நிறைவு
இத்திட்டம் தற்கால உலகஒழுங்கில்; வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள மக்களுக்கு ஈடுகொடுத்து எமது தாயக மக்களும் முன்னேறக்கூடிய வாய்ப்புக்களை வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது. இதன்மூலம் மேலைநாட்டு மோகம் தணிக்ப்பட்டு எமது பிரதேசங்களும் மேலைநாடுகளுக்கு இணையாக அல்லது அதற்கு மேலாக வளரும் நிலை ஏற்படலாம். ஏற்படவேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கு.

12 Responses to “சமூக மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டம்”

 • selvarajah:

  elvarajah:
  March 25, 2011 at 8:21 am

  அம்பாள் துணை.
  சிறுவர்களின் முன்னேற்றத்தையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு மன்றத்தினர் செய்யப்போகும் கட்டட அபிவிருத்தியில் எந்தவித இடையூறும் விளைவிக்காமல் அவர்களோடு இணைந்து பங்காற்றுமாறு எங்களூர் பெரியோர்களையும் சமயத்தொண்டர்களையும் குருமார்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  நன்றியுடன்
  வெளிநாடுகள் வாழ் பணிப்புலத்து அகதிகள்.
  நன்றி,வணக்கம்
  இதுவும் நானே எழுதியதே.

 • selvarajah:

  அம்பாள் துணை,
  அண்ணன் இரத்தினராசாவுக்கும் ஏனைய ம.உறுப்பினர்களுக்கும்,
  மேற்கூறிய கருத்து என்னுடையதல்ல, எங்களூரவர்கள் கூறியது. அவர்களுக்கு இணைய வசதி இல்லாத காரணத்தினால் என்மூலம் எழுதப்பட்டுள்ளது.
  இதனை நன்றாக வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.
  நீச்சல்தடாகம் கட்டுவதனை நான் மட்டுமல்ல வெளிநாட்டில் வசிக்கும் அனைவருமே வரவேரப்பார்கள்..ஆனால் அவற்றிலுள்ள நன்மைதீமைகளை ஊரில் உள்ள அனுபவசாலிகளுக்குத்தான் தெரியும்..
  இவற்றைக்கட்டும் போது மக்களுடைய கருத்துக்களையும் அறிந்து அனுசரித்து ஒப்பதலுடன் கட்டினலே அவர்கள் பயன் பெறுவர்.
  எனது கருத்துக்கள் அனைத்தும் பணிப்புலத்து இராசன் என்ற என் பெற்றோர் என்னை அன்பாக மனதார அழைத்த பெயரிலேயே பதிவாகும்.
  நாடோடி என்றால் வீடு வாசல் ஊர் விலாசம் இல்லாதவர் என்பது பொருள்.அவர்களுக்கு மானவமானம் என்றால் என்னவென்று தெரியாது..கிடைத்ததை உண்டு தெருவோரங்களில் படுத்து உறங்கிக் காலத்தை ஓட்டுபவர்கள்..
  அவர்களுக்கு எழுதிய கருத்தை வாசித்து புரிந்தணர்வதும் சிரமம்தான..
  நன்றியுடன்
  பணிப்புலத்து இராசன்

 • Ratnarajah:

  அன்பின் செல்வராஜா
  இதே இணையத்திற்கு நீங்கள் முன்பு எழுதிய
  கருத்துக்கள் எது உங்கள் உண்மை
  நிலைப்பாடு

  Selvarajah K.:
  January 18, 2011 at 11:58 am
  அம்பாள் துணை நிற்க>
  அண்ணன் இரத்தினராசாவின் க ருத்துக்கள் எமது ஊருக்கு ஏற்புடையவையே;ஆனாலும் முன்பு ஒருகாலத்தில் நாங்கள் எல்லரும் நீந்திப் பளகிய கோயில் கேணிகளில் இப்போது யாருமே நீந்தத் தடை; அதனால் அனேகமான எங்கள் பதிய தலைமுறையினருக்கு நீந்தத் தெரியாது போய்விட்டது.எங்களில் சிலர் வயல் வெள்ளத்தில் பளகியவர்களும் உண்டு. வெள்ளத்தின் சுத்தம் உங்களுக்கு தெரியாத்தா.நன்றியுடன இராசன்

  Reply

  • நடோடி:

   அது அவருக்கே தெரியாது. இப்படி திடீரென்று நிங்கள் கேட்ட……….

 • selvarajah:

  18-05-11
  அம்பாள் துணை நிற்க.
  மறுமலர்ச்சி மன்ற உறப்பினர்களுக்கு பணிப்புலம் வாழ் மக்களின் அன்பான வேண்டுகோள்.
  தங்கள் ம.ம.ம கட்டுமானப்பணிகள் வரவேற்கத் தக்கதே.தங்களுடைய நீச்சல் தடாகம் அமைப்பது பற்றி;
  சிலகலாச்சாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எம்மவர் அஞ்சுகின்றனர்.காரணம் அயலூர்களில் இப்போது நீ.தடாகம் இல்லாத்தினால் அவர்களும் வந்து நீந்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும்.அப்படிக் கூட்டம் கூட்டமாக வந்து குளிக்கம்போது சந்தோசத்துக்காக இலகுவாக்கக் கிடைக்கக் கூடிய மதுவகைகளைப்பயன்படுத்தவும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றது. மதுபோதையிலோ,மாது போதையிலோ இருக்கும் இளைஙர்கள் வழியில் நடமாடும் மாதுக்களுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளவும் அல்லது காதல் வார்த்தைகளைக்கூறிப் பெண்களை ஏமாற்றி தங்கள் காமலீலைகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற சீர்கேடுகள் ஏற்பட்டுவிடும்.அப்படித் தவறுகள் ஏற்ப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை யாராவது தட்டிக் கேட்டால் தனிப்பகை ஊர்ப்பகையாகி மோதல்கள் உண்டாகும்.என்ற காரணங்களினால் நீ.தடாகம் வேண்டாம் என்று பணிவாக்கக் கேட்டுக் கொள்கின்றனர்.

  மற்றைய அபிவிருத்திப் பணிகளினால் கூட சில இழப்புக்கள் இருக்கின்றன. எமது மக்களில் 75%ஆனவர்கள் நிவாரணப்பணத்தினை வாங்குபவர்கள். இவ்வளவு பெரிய ,தொகைப்பணத்தில் கட்டங்கள் கட்டி ஊரை முன்னேற்றும் போது, அவர்களுடைய நிவாரணத்தில் அரசு கைவைத்துவிடும் என்ற அச்சமும் அவர்களிடம் உண்டு.
  அதனையும் உணர்ந்து முடிவெடுக்குமாறு அன்பான உள்ளங்களைக் கேட்டுக்கொள்கின்றனர் எமது உறவுக்கள.
  நன்றி.வணக்கம்.
  பணிப்புலத்து மக்கள்.

  • நடோடி:

   பணிப்புலத்து மக்களின் சார்பில் திரு செல்வராசாவின் வேண்டுகோள் வரவேற்க தக்கதே.. இதுவரையில் ம.ம.மன்றம் கட்டிய கட்டிடங்களும் விளையாட்டுத்திடலும் நல்ல வடிவாக உள்ளது. இனி கட்ட போகின்ற நிச்சல் தடாகம் பற்றிய கருத்து நிச்சயம் கருத்தில் எடுத்து ஆராந்து பார்க்க வேண்டும். குறிப்பாக மன்ற வளவில் இருக்கும் முருகன் கோவிலின் அழகுக்கு நீச்சல் தடாகத்தில் வாலிபர்கள் கோ………..த்துடன் குளிப்பது அங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பெரும் அசெளகரியத்தை கொடுப்பதாக இருக்கும். உடனே மன்ற கோவில் வளாகத்தில் அமைக்கப்பட இருக்கும் நீச்சல் தடாக கட்டமைப்பை தடுத்து நிறுத்தியாக வேண்டும். மன்ற வாலிபர்கள் வேணுமென்டால் வயல் வெளி வெள்ளத்தில் நீந்தி பழகட்டும்..அவர்களுக்கு வரும் நோய் அவர்களுக்கு மட்டும்தானே. அது பற்றி நாம் ஒன்றும் அலட்டி கொள்ள மாட்டோம்.
   இதை ம.ம.ம நிர்வாகம் செவிமடுக்கவிடின் அண்ணர் செல்வராசா தலைமையில் அந்த நீச்சல் தடாகத்துக்கு முன்னிலையில் நாம் உண்ணாவிரதம் இருக்க கூட தயங்கமாட்டோம் என்பதை அறுதியாகவும் உறுதியாகவும் தெரிவிக்கின்றோம்.

 • marumalarchian:

  பண்கலைக்கூடத்தின் முடிவு வரவேற்க்கலாம்.ஆனால் பணிப்புலம் வாசிகசாலை விடயத்தில் மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என புரியாமல் உள்ளது.ஓம் என்பதும் இல்லை என்பதும் உங்கள் உரிமை உங்கள் வளமையுமாகும்.இதை விட தற்ப்போது சமூக மேம்பாட்டு அபிவிருத்தி திட்டம். பணிப்புலம்,காலையடி,காலையடிதெற்க்கு,சாந்தை என பெயர்மாற்றம் பெற்றுள்ளதால் இதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.ஆனாலும் ஊரின் அமைப்புகள் அந்த ஊரில் எல்லாப்பணிகளையும் சமமாக பார்த்து உதவிக்கரம் கொடுப்பதே நன்று.உங்கள் பாகுபாடானபோக்கு பலரிடம் பல கேள்விகளை இன்று கனடாவில் உருவாக்கியுள்ளது. மறுமலர்ச்சியான்

 • MALAR:

  நல்லதொருவிளக்கம் இப்போது பலரிதைவிளங்கிக்கொண்டிருப்பதோடு இதனால் எமது ஊருக்கும் எம்மக்களுக்கும் ஏற்படப்போகும் நன்மைகள் பற்பல என்பதை விளங்கிக்கொண்டிருப்பார்கள் விரைவில் இதை உருவாக்கித்தாருங்கள்

 • Ratnarajah:

  மிகவும் சிறந்த முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை எமது ஊர்ச் சமூகத்தில் உள்ள அனைவரும் தெளிவாக அறியவேண்டும். முதியோர்,இளையோர் என்று பேதம் இன்றி அனைவருக்கும் விளக்கங்கள் சென்றடைய வேண்டும். வசதி என்றால் இதைப் பிரதி பண்ணி சமூக மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான விடயங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்தினால் மிகவும் நன்று. இது எனது தாழ்மையான அபிப்பிராயம்.பணிப்புலம், காலையடி,சாந்தை, கலட்டி, செட்டிகுறிச்சி , செருக்கப்புலம், குஞ்சம்கலட்டி ,காலையடி தெற்க்கு ,என்று எமது சமூகத்தில் உள்ள அனைவருக்கும் விளக்கங்கள் சென்றுஅடையவேண்டும். எமது சமூகத்தில் உள்ளவர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டு பரிசீலனை செய்யப்படவேண்டும். எமது சமூகத்தின் உள்ள அனைவரின் ஆதரவோடும் , அன்போடும், ஒத்துழைப்போடும் எமது சமூக மேம்பாட்டு திட்டம் நடப்பதற்க்கான விழிப்புணர்வுகள் உருவாக்கபடவேண்டும்.இயன்ற வரையில் எல்லோரையும் இது எமது சமூகத்தின் அபிவிருத்திக்கான பணி என்ற உணர்வினை,தெளிவினை எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும். இதில் பார்வையாளர், கருத்துசொல்பவர்களாக இல்லாமல் எல்லோரையும் இயன்ற வரையில் பங்காளிகள் ஆக மாற்ற வேண்டும். பணம் நன்கொடைசெய்பவர்கள் மட்டும் அல்ல பங்காளிகள் , சமூக மேம்பாட்டுத்திட்டத்திற்க்கு தரமான கருத்துகளை தந்து எம்மை ஊக்குவிப்போர், எமது சமுதாயத்துக்கு சமூகஅபிவிருத்தி திட்டத்தினை பொதுமக்களுக்கு விளங்கப்படுத்துவோரும், உடல் உழைப்பாளிகளும் எல்லோருமே பங்காளிகள்தான். நாம் எல்லோரும் ஒரு தாய்பிள்ளைகளாக ஒற்றுமையாக அன்பாக ஊரின் வளர்ச்சி கருதி கரம் கோர்த்து, இணைந்து இன்பமாக எடுத்து அடிவைப்போம். எமது சமூகத்தின் பலத்தினை போற்றுவோர் போற்றட்டும் , தூற்றுவோர் தூற்றட்டும் எமது ஊரவர்களின் ஓற்றுமையின் கட்டமைப்பால் உலகுக்கு எங்கள் சமூகத்தின் பலத்தினைக் காட்டுவோம்.நல்லவை எல்லாம் நன்றாகஅமைய நன்றிகள், வாழ்த்துக்கள்.

 • நிச்சயாக இந்த விளக்கம் எல்லோரிடமும்ம சென்றடைய வேண்டும் கிராமத்தில் இருப்பவர்களிடமும்…….
  உள்ளிருப்பவரிடமும்……..வெளியிருப்பவர்களிடமும்………..
  எப்பவுமே தூரநோக்குடன் செயற்பட்டால் அது சமூக வளர்ச்சிக்கு ஏதுவாய் இருக்கும்……..

 • T.BALA. pannipulam:

  மறுமலர்ச்சி மன்றம் அபிவிருத்தி திட்டம் என்ற பெயர் மாற்றம் வரவேற்க்கத்தக்கதே.இதன் செயற்த்திட்டம் ஒட்டுமொத்த எம்மவரின் திட்டமாகும் என்பதை உணரக்கூடியதாய் இருக்கின்றது.என்றும் எதிலும் புரிந்து செயற்ப்பட நாளெடுக்கும் என்பதே இன்றைய பல நிகழ்வுகள் உணர்த்துகின்றன..பகி தலைமை மன்றத்துக்கு தேவை அவர் தலைமை தாங்கி திட்டம் நிறைவேற்றப்படவேண்டும். பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நன்றி எம்முடன் அனைவரிடமும் தகவலை விளக்கமாக பரிமாறியமைக்கு.

  சகல அங்கங்களும் கவரக்கூடிய முறையுலும், எல்லா தரத்தினருக்கு விளங்க கூடிய முறையிலும் பிரசுரிக்க பட்டிருக்கிறது. இன்னுமொருக்க நன்றி – இனி எனக்கு குழப்பம் ‘இல்லை’!

  எனக்கு முக்கியமாக மனம்கவர்ந்த விடயம் பின்வருமாறு: –

  ~~~இத்திட்டம் தற்கால உலகஒழுங்கில்; வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள மக்களுக்கு ஈடுகொடுத்து எமது தாயக மக்களும் முன்னேறக்கூடிய வாய்ப்புக்களை வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது. இதன்மூலம் மேலைநாட்டு மோகம் தணிக்ப்பட்டு எமது பிரதேசங்களும் மேலைநாடுகளுக்கு இணையாக அல்லது அதற்கு மேலாக வளரும் நிலை ஏற்படலாம். ஏற்படவேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கு~~~

  இதை எமது இளையவர் மொழியில் innovative approach என்று சொல்லுறனாங்கள் 🙂 .

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து